பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 சலோம்

பளபளப்பான ஒளி வீசும் கற்களும், துயரம் உமிழும் கற்களும் என்னிடம் இருக்கின்றன. இறந்த பெண்ணின் கண்கள் போன்ற கோமேதகக் கற்களும் என்னிடம் உண்டு. கலைகள் மாறுந் தோறும், மாறுதல் அடையும் ஒளி விசும் நிலவு நீர் மல்கும் கற்களும், முட்டை வடிவில் நீலக்கற்களும், கருநெய்தல் மலர்கள் போன்ற கற்களும் என்னிடம் உண்டு. கற்களின் நெஞ்சில் கடல் அலையிடுகிறது. உள்ளே உறங்கும் நீல அலைகளில் வெண்மதி துன்புறுத்துவதில்லை. மஞ்சள் நிறமுற்ற மணிக் குவைகள், கடற் பச்சைக் கற்கள், செந்நிற மாணிக்கங்கள், இன்னும் பல வியப்புறு கற்களும் என்னிடம் உண்டு, நிமூதியா மன்னன் தீக்கோழியின் இறகுகளாலான ஒரு மேலாடையை அனுப்பியிருக்கின்றான் இந்தத் தீவுகளின் அரசன் மென்மையான கிளிச் சிறகுகளால் பின்னிய நான்கு அழகிய விசிறிகள் அனுப்பியதையும் வைத்திருக் கிறேன். தங்கப்பேழையில் மூன்று வைடுரீயக் கற்கள் வைத்திருக் கிறேன். என்னிடம் வேறொரு கிடைத்தற்கரிய கல் இருக்கிறது. அதனுள் ஒரு பெண் கூர்ந்து பார்ப்பதானது கேடு, அதனை இளைஞர்கள் பார்த்தாலும் துன்பம்தான். இந்தப் பரந்த உலகில் அதனைக்கொண்டு பல புதுமைகள் நிகழ்த்தலாம். அதை நெற்றி யில் அணிந்துகொள்பவர்கள், இல்லாத வியப்பார்வக் கற்பனை செய்து கொள்ளலாம். அவற்றைக் கையில் எடுத்துச் செல்வோர், பெண்களை மலடாகச் செய்துவிடலாம். இவை விலை மதிக்க முடியாத ஒப்பற்ற உயர்ந்த களஞ்சியங்கள். இவை மட்டிலுமல்ல, கருங்காலிப் பேழையில், நான் இரண்டு கிண்ணங்களில் அம்பர் வைத்திருக்கிறேன். அவை தங்க ஆப்பிளைப்போலவே இருக் கின்றன. யாராவது பகைவன் ஒருவன் இந்தக் கிண்ணங்களில் நஞ்சை ஊற்றிவிட்டால், அவை வெள்ளி ஆப்பிளாக மாறிவிடும். அம்பர் வைத்திருந்த பேழையில் கண்ணாடி பதித்த மிதியடிகள் வைத்திருக்கிறேன். 'சீர் நாட்டிலிருந்து கொண்டுவந்த சிறந்த மென்பட்டும் என்னிடம் உண்டு. யூபிரிட்டீசு நகரத்திலிருந்து கொண்டுவரப்பட்ட அரத்தச் சிவப்புக் கற்கள் பதித்த கை வளை யல்களும் என்னிடம் உண்டு. இவையெல்லாம் விலை மதிப்பற்ற