பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 சலோம்

மனிதன் உலகத்தோடும், இறைவனோடும் பிணைக்கப்பட்டு நிற்பது, இந்த அரிய குழந்தைச் செல்வத்தால்தான், குழந்தைத் தொடர்பின்றி மனிதன் வாழமுடியுமா? முடியவே முடியாது!

女 女 女

சோகச் சூறாவளியிலே, ஒருவன் இறைவனையே மணக் கின்றான்; சோகமே, ஒரு திருமணக் கோலம்தான். கடவுளையே காதலித்து நெருங்கும் நேரம். துன்ப உலகில்தான் அருமையாக வருகிறது. இதைக் கவிஞன் தாந்தே அருளாவேசத்துடன் உணர்ந்தே பாடியிருக்கிறான்.

女 女 女

பெரும் பாவங்கள் எல்லாம், மூளையிலேதான் உதயமா கின்றன; சிந்தனையே விஷமாக மாறிவிடுகிறது.

அன்பு, ஒரு அகண்ட சக்தி வாய்ந்தது; அன்பே, தெய்வத் தொடர்போடு உலகத்தின் இன்னல்களையும், ஏக்கத்தையும், ஏமாற்றத்தையும் திருத்திச் சுத்தம் செய்து மனித உள்ளங்களில் நன்மையை நாடும் இன்ப எழுச்சியைத் தூண்ட முன் வருகிறது.

女 女 女

சிருஷ்டியில் எந்த ஜீவராசியும் பாஷையின் மூலம் பேச முயல்கிறது; ஒரு கலைஞனுக்கும், மொழியே முக்கியம்; என் பேனா முனையிலே, சிந்தனை திரவம்போலப் பாய்ந்தோடு கிறது. ஒவ்வொரு விருகrமும், தன் வளர்ச்சியை இலையாலும், பூவாலும், கணியாலும் எழுதிக் காட்டவில்லையா? இதுதானே பாஷையின் வளர்ச்சியைக் காட்டும் இதய விசித்திரம்.

女 女 女

விதியின் விபரீதத்திலே, உண்மை மின்னிப் புலம்பிக் கொண்டே வருகிறது. இதை உணரும், ஆற்றல், மனிதனுக்கு சந்தர்ப்ப ஒளியிலேதான் தெரிகிறது; கற்பனையின் உயரத்திலே