பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசுகார் ஒயில்ட்டு 6

வெளியீடு. சில சமயங்களில் துக்கம்தான் ஓர் ஒப்பற்ற உண்மை என்று உணர்கிறோம். மற்றவைகளெல்லாம் கண்ணிற்பட்டு மறையும் பொய்த் தோற்றங்களேயாம். பசியிலே தோன்றி மறையும் பொய்க் கூற்றுகள்.

"ஆனால் துக்க மேடையிலேதான் உலகம் கட்டப்பட்டிருக்

கிறது; ஒரு குழந்தை பிறந்தாலும், ஒரு நட்சத்திரம் ஜனித்தாலும் அங்கே துக்கம் தீவிரமாக எழுகின்றதல்லவா?'

ஆஸ்கார் ஒயில்டின் கதைகள் சிறந்த சிறுகதைகள். வாழ்க்கையின் விசித்திர அந்தரங்கத்திலே சிறந்த நீதிகளை வைத்துப் பின்னி எழுத வேறு ஒருவராலும், இந்த உயரத்துக்கு இலக்கியத் துறையிலே வரமுடியாதுதான். "நட்சத்திர குழந்தை' "கடல் கன்னி' எவ்வளவு அருமையான கதைகள் பாஷை மின்ன லோவியமாகவே பல வர்ணச் சித்திரங்களாகவே, காட்சி யளிக்கிறது.

Picture of Dorian Gray அவருடைய மிகச் சிறந்த நாவல்; நிக ரற்ற பாஷை, நிகரற்ற சிந்தனை சிருஷ்டி எழில்வாய்ந்த வாழ்க்கைச் சிற்பம்; தமிழில் என் நண்பர் ஒருவர் மொழி பெயர்த்துக் கொண்டிருக்கிறார். விரைவில் வெளிவரும், ஆங்கில பாஷையை ஒரு தந்தக் கோயிலாகவே ஆஸ்கார் ஒயில்ட்டு ஆர்வத் தோடு சிருஷ்டி செய்திருக்கிறார்.

அவருடைய நாடகங்கள், தனி இன்பம் கொண்டவை: பெண்களின் சாகசத்தையும், மனநிலைகளையும் மிக நுட்பமாகச் சித்திரித்திருக்கிறார். பெண்களின் பேச்சு தத்ரூபமாகவே இயற்கை யாகவே அமைந்திருக்கிறது. ஒயில்டின் ஆங்கிலச் சொற்கள். பெண்களின் கண்களைப்போல அருமையான இன்ப ஜாலங்களை அள்ளி இறைக்கின்றன. "சலோம்' அருமையான நாடகம். நாடகம் அனைத்தும் கவிதையின் எழிலோடு பரிமளிக்கின்றது. சுந்தரி சலோமியின் நடனமும், பேச்சும், சபதமும், காதல் வெறியும் மிக மிக அருமையாகத் தீட்டப்பட்டிருக்கின்றன.