பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
33

33 நாரத்தம் பழம் - பித்தத்தை கணிக்கும், தாதுவிர்த்தி யாம். நாரத்தம் பிஞ்சு-நல்ல பதார்த்தம் - சீதளம், வயிற்றுப் பசம் இவைகளைக் குறைக்கும் - சுக்கில விர்த்தியாம். நில ஆவாரை - மலக்கட்டை நீக்கும் - பேதியாக கஷாயமாய்க் கொடுக்கலாம். நிலப் பூசினிக் கிழங்கு-நல் உணவாம் - உடலுக்கு வன்மை கரும்-கொஞ்சம் வாய்வு பதார்த்தம். நீராகாரம்-குளிர்ச்சி யுண்டு பண்ணும் - வாத பித்த நோய்களுக்கு நல்லது-சுக்கிலத்தை விர்த்திசெய்யும். காலையில் அருந்துவது நல்லது. மலத்தைத் தள்ளும். நெய்ச்சட்டிக் கிரை-பித்தமேகம், உட்சூடு, இவைகளே நீக்கும். தாதுவிர்க் கியாம் - உடல்தேற்றி. நெல்லிக்காய்-குளிர்ச்சி பதார்த்தம் - மலத்தை இளகச் செய்யும்-பிரமேகம், பித்தம், கபம் இவைகளை குணப் படுத்தும் - காயசித்தியாம் - முக்கியமாக கருநெல்லிக் காய் காயசித்திக்கு அதுகுணமா மென்பர் - இதைத் துவையலாகவும், வற்றலாகவும் உபயோகிக்கலாம். இதை இரவில் உண்ணலாகாகென்பர். இதில் பல உயிர் சத்துகள் அடங்கி யிருக்கின்றனவென்று ஆங்கில வைத்தியர்கள் ஒப்புக்கொள்கின்றனர். கெல்லிக் காய் முரபா நல்ல பலம் தரும் பொருள். இதில் உயிர் சத்து (சி) இருக்கிறது. அருநெல்லிக் காய் - காசம், உட்சூடு இவைகளை நீக்கும் - (சி) உயிர் சக்து இருக்கிறது. பெரிய நெல்லிக்காய் ஒன்றில் இரண்டு சாத்துகுடி பழங்களின் உயிர்சத்துகள் இருப்பதாக ஆங்கில வைத் தியர்கள் கணக்கிட்டிருக் கின்றனர். நேர்வாளம்-பேதியை உண்டுபண்ணும் - அகற்கும் மித மாய் உபயோகிக்கவேண்டும். பச்சைக் கற்பூரம் - குன்ம நோய், இருமல், கீல்வாயு, வாதநோய் இவைகளுக்கு நல்லது-வாயுவைக் கண்டிக் 9