பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
42

42 மணத்தக்காளிக் காய் - கிலேஷ்ம நோயையும், வாக நோயையும் குணப்படுத்தும்-மலத்த்ை இளகச்செய் யும்-உடம்பிற்கு நல்லது - குளிர்ச்சி பதார்த்தம்நோயாளிகளும், வயோதிகர்களும் இதன் வற்றலை தாராளமாய்ப் புசிக்கலாம். மணத்தக்காளிக் கீரை - இதைப் பச்சடியாகச் செய்து புசித்தால் வாய்ப் புண் நீங்கும். மரியங் கொழுந்து -- சீதபேதிக்கு நல்லது-வாந்தியை அடக்கும்-துவையலாகச் சாப்பிடலாம். மலைத் தேன்-நோயாளிக்கு நல்லது-பலம் கரும் பொருள் -தேகச் சூடு நீங்கும்-இருமலுக்கு நல்லது-புதிதாய் இருக்கவேண்டும்-காட்பட்டது ஆகாது. மங்குஸ்தான் பழம்-அதிசாரம், சீதபேதி இவைகளுக்கு நல்லது-குளிர்ச்சி பதார்த்தம், பலம்தரும் - நல்ல உணவாம் - நீர் வியாதிக்காரர்கள் தாராள மாய்ச் சாப்பிடலாம். மாங்காய்-நல்லதல்ல-சுக்கில நாசம் உண்டாம் - சிரங்கு காப்பான் இவைகளை உண்டாக்கும், மாங்கொட்டை ; பருப்பு - போஷண காரி - மூலசூடு, ாத்தமூலம் இவைகளைத் தடுக்கும் - சீதபேதியை நிறுத்தும்-பெரும்பாடுகுறையும்-குளிர்ச்சிபகார்க்கம். மாம்பழம்-இதில் உயிர் சத்துகள் (ஏ)(சி) இருக்கின்றன -மலமிளகி - மூத்திரத்தை அதிகரிக்கும் - அவ்வளவு நல்ல பதார்த்தம் அல்ல - சாப்பிடவேண்டி யிருந்தால் உடனே பால் சாப்பிடல் நலம். புளிப்பில்லாத மல் கோவா, பாதாமி ஜாதி பழங்களே மிதமாகப் புசிக்க லாம் - ரத்தவிர்த்தியாம் - நமைச்சல், மார்பெரீச்சல, கண் நோய், காப்பான் இவைகளை உண்டுபண்ணும -பசியைக் குறைக்கும், மாசிக்காய்-குழந்தைகளுக்கு நல்லது பல மேகவியாதி களே நீக்கும்-உடலுக்கு வன்மை தரும்.