பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உள்ளவுரம் அற்றவர்கள் போல், வாய்வாளாத ஊமைகளாய் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

அவ்வாறின்றி, அவர்கள் இதுவரை, இது பற்றி ஏதும் அறியாதவர்களாயிருப்பின், இன்றே அதுபற்றி உடனடியான நடவடிக்கை எடுத்து, அவ்விதழ் அவ்வாறு சாதி வெறியை வளர்க்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்தவேண்டும். முதலமைச்சர் இதுபற்றித் தனிக் கவனம் செலுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம். இல்லெனின் அவ்விதழின் அப் போக்கைக் கண்டிக்கும் நோக்கத்துடன், தென்மொழி பெரிய போராட்டத்தை நடத்தவேண்டி வரும் என்று எச்சரிக்க விரும்புகிறோம்.


இளைதாக முள்மரம் கொல்க; களையுநர்
கைகொல்லும் காழ்த்த விடத்து

குறிப்பு : ஆங்காங்குள்ள தென்மொழி யன்பர்களும், பிற பொதுநல ஆர்வலர்களும் இவ்வறிக்கையை ஆயிரக்கணக்கில் அச்சிட்டுப் பரப்புக. அமைச்சர்களுக்கும் அனுப்பி வைக்க. பெரிய பெரிய தட்டிகளில் எழுதிப் பொது விடங்களில், பொது மக்களின் பார்வைக்கெனவும் வைக்க.

தென்மொழி சுவடி-17; ஒலை-2 (1980)

52

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/54&oldid=1165241" இலிருந்து மீள்விக்கப்பட்டது