பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பண ஆளுமைகள் ஆகியவற்றால் எளிதாகக் கைப்பற்றி, நூற்றுக்குத் தொண்ணுற்றொன்பது விழுக்காட்டிற்கு மேல் அகலக் கால் பரப்பிக் கொண்டு, வேறு வகுப்பினரைக் கிட்டவும் நெருங்க விடாமல் அடக்கி ஆண்டு, நுகர்ச்சி பெற்று வந்தனர். இவற்றில் அரசு கை வைக்கப் போகிறது என்ற நிலை வந்ததும், அவர்கள் இவ்வரிய மாற்றங்களை ஏற்படுத்திய இம் மண்டல் குழுத் தீர்வுக்கு எதிர்ப்புக் காட்டி வருகின்றனர். இது ஒரு கொடுமையான அதிகார ஆளுமைப் போக்காகும்.

மண்டல் குழு அறிக்கை என்பது, பிந்தேசுவரி பிரசாத் மண்டல் (பி.பி.மண்டல்) என்பவரின் தலைமையில், 1978ஆம் ஆண்டு சனதா அரசால் அமைக்கப் பெற்று, இந்தியாவில் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்குச் சாதி எண்ணிக்கை விழுக்காட்டின் அடிப்படையில் அரசுப் பணிகளில் வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்று, 1980இல் தீர்வு செய்யப்பெற்ற ஓர் ஆய்வு அறிக்கை ஆகும். அதில் முன் கூறிய நடுவணரசுப் பணிகளில், குமுகாய அமைப்பில் சாதி நிலைகளால் பிற்படுத்தப் பெற்ற இன மக்களுக்கு, 27 விழுக்காடு இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்று கூறப்பெற்றுள்ளது. தாழ்த்தப் பெற்றவர்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும் ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீடுகளும் வழி செய்யப் பெற்றுள்ளன.

மொத்தம் 430 பக்கங்கள் கொண்ட மண்டல் குழு அறிக்கை, சாதிய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைக்க வேண்டிய நடுவணரசுப் பணி வாய்ப்புகளையே முழு நோக்கமாகக் கொண்டு வரையறை செய்யப் பெற்றதாகும் என்பதில் ஐயமில்லை. சாதியொழிப்போ குமுகாயச் சமநிலையோ அதனுடைய நோக்கமன்று.

இருக்கின்ற மத வேறுபாடுகள், சாதி வேறுபாடுகள், பிறப்பை அடிப்படையாகக் கொண்ட ஏற்கெனவே உள்ள ஒரு குமுகாய அமைப்பை மாற்றி, வேறொரு முன்னேற்றமான வேறுபாடற்ற ஒரு புதிய குமுகாய அமைப்பைக் கருத்தில் கொண்டு செய்த முடிவுகள் அல்ல, இம் மண்டல் குழு முடிவுகள். >

தற்போது அப்படியே நடைமுறையில் உள்ள ஆனால் ஏற்கெனவே அமைந்து இறுகி விட்ட ஒரு சாதியமைப்புக் குமுகாயத்திலேயே, ஏற்படுத்தப்பட்ட சாதிகளாகக் கருதப்பெறும் சாதியினங்களை வேறு பிரித்து அறிந்து, அவற்றுக்கும் அரசுப் பணிகளில் முன்னேற்ற வாய்ப்புகளைத் தர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தீர்வுசெய்யப் பெற்றதாகும் இக் குழு அறிக்கை.

எனவே, சாதிகளை அப்படியே ஒப்புக் கொண்ட தன்மையிலேயே, இம் மண்டல் குழு அறிக்கை செயல்படுத்தப் பெறும் என்பது தெரிகிறது. ஆகையினால், இவ்வறிக்கைச் செயற்பாடு ஒரு வகையில் சாதிப் பிரிவுகளை அப்படியே நிலை நிறுத்துவதற்கும் பயன்பட்டு விடுமோ என்று

64

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/66&oldid=1164401" இலிருந்து மீள்விக்கப்பட்டது