பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8



கணவன் பொருள் தேடிப் போயிருக்கும் பொழுது, அயலான் ஒருவன், தன் முகவழகு கண்டு மயங்கித் தன்னையே விழித்து விழித்து நோக்கியதைப்பொருது, ‘கணவன் கண்டு மகிழவேண்டியது என் அழகு, அதைப் பிறர் காண்பதால் எனக்குக் களங்க முண்டாவதல்லது களிப்பு உண்டாகாது. ஆகவே, போன கணவன் போருளீட்டி மீளும் வரை என் முகம் குரங்கு முகமாகி, அழகு குன்றுமாக, என வேண்டி, அவ்வாறே குரங்கு முகம் பெற்று வாழ்ந்து கணவன் வந்து வீடடைந்ததும், மீண்டும் தன் அழகு முகம் பெற்று அக மகிழ்ந்தான் ஒரு பெண்ணினல்லான்.

தன்னை ஈன்ற தாய், அவள் இளமைப் பருவத்தில், அவளொத்த இளம் மகளிரோடு ஆடிக் கொண்டிருக்குங் கால், அவருள் ஒருத்தியோடு ‘எனக்கு மகள் பிறக்க, உனக்கு மகன் பிறத்தால் என் மகள் உன் மகன் மனைவியாவள்’ என உரைத்து உறுதியளித்தாள் என்பதைப் பிறர் உரைக்க உணர்ந்து, அது, அவள் தன் அறியாப் பருவத்தில் உரைத்த அறியாமை உடையது எனக் கொண்டு தள்ளிவிடாது, அச்செய்தி கேட்ட அன்றே, தன்னை மணக்கோலம் செய்துகொண்டு, தன் தாயின் ஆடற்பருவத்துத் தோழி அளித்த இளைஞனத் தேடி அடைந்து மணந்து மாண்புற்றாள் ஒரு மங்கை நல்லாள். கண்ணகி போற்றிய கற்புடை மகளிர் எழுவர் இவர். இவரையும், இவர்போலும் கற்புடை மகளிரையும் பெற்ற பொற்புடையது புகார்ப் பெருநகர்.

புகழ்மிக்க அப்புகார் நகர்க்குப் பெருமை அளிக்கும் பெருங்குலத்தவருள் வணிகர் குலத்தவர் தலை சிறந்து விளங்கினர். அவ்வணிகர் குலத்தவர் வாணிக வாழ்வால் வளம் பல பெற்று வாழ்ந்தனர். கொள்வதை மிகை