பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

في ؟ قة

தாமரை பொறிக்கப் பெற்ற பீடிகையுளது. அப்பெரு மையால் பாதபங்கயமலே எனப் பெயர் பெறும் அம் மலையை வலம் வந்து வணங்கும் விருப்புடையேன். மனைவியரோடு நீயும் வந்து வழிபடுக” எனக் கூறிஞர். அரசனும் அவ்வாறே தாரை வீரையாய மனைவியர் இ. நவரோடுஞ் சென்று மலையை வலம் வந்து வணங் கிளுன்..

சின்னுட்கள் சென்றன. ஒருநாள், வழக்கத்திற்கு மாரு மதுவுண்ட வீரை, மதுமயக்கத்தால் மதிகெட்டு, மதங்கொண்ட யானை முன் வீழ்ந்தது, அதன் கால் களால் மிதியுண்டு உயிரிழந்து போனள். உடன் பிறந் தாளுக்கு நேர்ந்த கேட்டினைக் கண்டு கலங்கிய தாரை, அரண்மனையுள் வானளாவ உயர்ந்து விளங்கிய மாடத்து உச்சியினின்றும் வீழ்ந்து உயிரிழந்தாள். இவ்வகை யால் அரசவாழ்விழந்து உயிர் நீத்த வீரையும் தாரையும் பாத பங்கய மலையை வலம் வந்து வணங்கிய நல்வினைப் பயத்தால், முறையே சுதமதியாகவும், மாதவியாகவும் காசிமா நகரிலும் காவிரிப்பூம்பட்டினத்திலும் வந்து பிறந்தனர். அந்நல்வினைப் பயனிஞலேயே, இப்பிறவி 'யில் நாடிடைப்பட்டுத் தோன்றினும், இறுதியில் ஓரிடத்தே ஒன்று கூடினர். அந் நல்வினைப் பயணி குலேயே, முற்பிறவியில் இலக்குமி என்பாளுக்குத் தமக்கையராய்ப் பிறந்தவர், இப்பிறவியில் அவ்விலக்குமி யின் மறு பிறப்பாம் மணிமேகலைக்குத் தாயாராம் தகுதி பெற்றனர். தன் பழம் பிறப்புணர்த்தும், இவ்வர றின அறிந்தமையால், சுதமதி, மாதவியாலும், அவள் மகள் மணிமேகலை பாலும் பேரன்பு காட்டி வாழ்த்திருத் தாள.