பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101

மகனே, அவன் கலம் ஊர்ந்து காவிரிப்பூம்பட்டினம் வகுங். கால், வங்கம் கவிழ்ந்து கடல்வாய்ப்பட்டு மறைந்து போளுன் என்ற செய்தியைக் கேட்டான். அவன் மனம் மாளாத்துயரில் ஆழ்ந்துவிட்டது. ஆண்டுதோறும். வழக்கமாகக் கொண்டாடும் இந்திர விழாவையும் அவன் மறந்துவிட்டான். அதனல் சினம் கொண்ட மணி மேகலா தெய்வம், காவிரிபூம்பட்டினத்தைக் கடல் கொள்க’ எனச் சாபம் இட்டாள். அவ்வாறே புகார்ப் பெருநகர் கடல் வயிறு புகுந்தது. மக்கள் அரண்மிக்க இடந்தேடி அலேந்தனர். அக்கால அந்நகரில் வாழ்ந் திருந்த சுதமதி, அறவண அடிகளோடும் ஆருயிர்த்தோழி மாதவியோடும் வஞ்சிமா நகரடைந்து வாழ்ந்திருந்தாள்.

பதியெழுவறியாப் பழங்குடிகள் பல்கிய பெரு மையுடையது என்ற பாராட்டினுக்குரிய புகார், கடலில் மூழ்கி அழிந்து விட்டது. கடல் நீர் பெருகிக் கேடு விளக்கும் காலத்தில் தம்மைக் காத்துக்கொள்ள விரைவில் அறவண அடிகளும், மாதவியும், சுதமதியும் அண்மையில் இருந்த வஞ்சி மாநகர்க்கு வந்து சேர்ந்தனர். ஆங்குத், தம் உயிருக்கும் உடைமைக்கும் நேர இருந்த கேட்டினைப் போக்கிக் கொண்ட பின்னர், மணிமேகலை குறித்து எண்ணத் தொடங்கினர். மன மாசு கெடுக்கும் நல்ல உண்மைகன் மணிமேகலை அறிய வேண்டுமாயின், அதற்கு ஏற்ற இட்ம் காஞ்சி மாநகரே ஆகும். காஞ்சி பல சமயத்தவரின் வாழிடம். சமய நெறி யுணர்ந்த பேராசிரியர் பலர் வாழும் இடம் அக்காஞ்சி, அவ்வாசிரியன்மார் அனைவரை யும்கண்டு அவர் கூறும் சமய உண்மைகளைக் கேட்ட பின்னரே உண்மைச் சமயம் எது என்பதை உள்ளம் உணரும். ஆதலின் மணிமேகலைக்கு உண்ண்ம்.