பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

யறத்தை யுணர்த்த வேண்டுமாயின், அதைக் காஞ்சி யிலேயே செய்தல் வேண்டும் என்ற அறவண வடிகளின் கருத்தினை இருவரும் ஏற்றனர். உடனே, மூவரும் காஞ்சி நகரடைந்து மணிமேகலையின் வருகையை எதிர் நோக்கி வாழ்ந்திருந்தனர்.

ஆபுத்திரன் நாட்டிற்கும், மணிபல்லவத் தீவிற்கும் சென்ற மணிமேகலை, தமிழகத்திற்குத் தண்ணிரால் நேர்ந்த கேட்டினைக்கேட்டு வருந்தினுள். தாயும், தாய் நிகர் சுதமதியும், ஆசிரியப் பெருமகனும் வஞ்சி சென்று வாழ்கின்றனர் என அறிந்து ஆங்குச் சென்ருள். ஆங்குச் சென்ற கால மூவரும் காஞ்சி சென்று விட்டமை யறிந்து ஆங்கடைந்தாள். காஞ்சிக் காவலன் வேண்டுகோட்கு இணங்கி, அமுதசுரபியால் அந்நாட்டு மக்களைப் பற்றி வருத்திய பசிப்பிணியைப் போக்கியவாறே, அரசன் கட்டிய அறச்சாலையில் வாழ்ந்திருந்தாள். அச் செய்தி கேட்ட சுதமதி, அறவண அடிகளோடும், மாதவியோடும் அவ்வறச்சாலை யடைந்து மணிமேகலையைக் கண்ணுற்று. மகிழ்ந்து மனநிறைவுற்ருள். மணிமேகலையின் மனப் பக்குவம் அறிந்து, அவளுக்கு அறவண அடிகள் உணர்த்திய உண்மை உரைகளைச் சுதமதியும் உடனி ருந்து கேட்டு உயர்வடைந்தாள். உண்மை நெறி உணர்த்தப் பெற்ற மணிமேகலை, பின்னர் பல சமயத் தலைவர்களையும் கண்டு, அவர்பால் சமய உண்மைகளைக் கேட்டு உணர்ந்ததையும், பின்னர் பவ த் திறம் அறவேண்டிய பெருந் தவநெறி மேற்கொண்ட பெருமை மிகு செயலையும் கண்டு உள்ளம் பூரித்தாள். மலர் பறிக்கச் சென்ற மணிமேகலைக்குத் துணை புரிய, அன்று அவளுடன் தான் சென்றதினலேயே, மணிமேகலை, இன்று மாண்பு. துமிகு பெரியோளாயினள் என்ற பெருமிதவுணர்வால்.