பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
15

பொருள் தேட அவனைப் புறநாடு போக்கினாள். இவ்வாறு இல்லறக் கடமைகளில் ஆழ்ந்திருந்தமையால், அதற்கு வாய்ப்பு இன்றி, வங்கம் ஊர்ந்து சென்றவன் வழியில் மாண்டுவிட்டான்; இல்லற வாழ்வளிக்க இனி அவன் வாரான்-என அறிந்ததும், அவள் தன்னுயிரை இழக்கத் துணிந்தாள்.

கற்புநெறி நிற்கும் காரிகையரின் கடமை எது என்பதை அறிந்தவள் ஆதிரை. காதலன் இறந்தான் எனக் கேட்ட அக்கணமே உயிரிழப்பவர் தலையாய கற்பு நெறி நிற்பவராவர். உயிர் தானே நீங்காதாயின், பொய்கை நீரிற் புகுந்து ஆடுவார் போல அழல்வாய்ப் பட்டு ஆருயிர் இழப்பவர் இடையாய கற்புநெறி நிற்பவ ராவர், அத்துணைத் துணிவற்ற உள்ளம் உடையவர், இப்பிறவியில் இடையற்றுப்போன உடனுறை வாழ்வு வரும் பிறவியிலாவது வந்து வாய்க்கவேண்டி, பழஞ் சோற்றைப் பச்சிலையில் பிழிந்து இட்டு, அதில் வேளை யிலைக் குழம்பிட்டுப் பிசைந்து, எள்ளுத் துவையல் துணை யாக உண்டு, பருக்கைக் கற்கள் பரப்பிய இடத்திலும் பாயின்றி உறங்கிக் கைம்மை நோன்பு மேற்கொண்டு காலமெல்லாம் வருந்திக் கிடப்பர். அத்தகையார் கடை யாய கற்புநெறி நிற்பவராவர், கற்புநெறி நிற்பாரின் இத் தகுதியும் திறமும் அறிந்த ஆதிரை, கணவன் இறந்தான் என்ற செய்தி கேட்டதும், தன் உயிர் தானே பிரித்து போகாமை அறிந்து வருத்தினள். வாழ்வில் இன்பம் வாய்க்காது போயினும் அத்தலையாய தகுதியும் வாய்த் திலதே என எண்ணி இடருற்றாள். தானே வாய்க்க வேண்டிய அத்தலையாய தகுதி வாய்க்காமை கண்டு வருந்திய ஆதிரை, இடைப்பட்ட நிலையாவது வாய்த்தலை வேண்டினாள். அதை வருவித்துக்கொள்ளத் துணிந்து