பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
17

காட்டிற்று. மலர் இனிதாக மணம் வீசிற்று. செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகள்போல், ஆதிரை, அவ் வீமத்தீயின் இடையே காட்சி அளித்தாள். அக்காட்சி யைக் கண்ணுற்ற அவ்வூர் மக்கள் களிப்புக் கடலில் ஆழ்ந்தனர். கனலையும் அடங்கப் பண்ணும் அவள் கற்பின் பெருமை கண்டு வியந்து போற்றினர்.

அந்நிலை கண்டு ஆதிரை அகமகிழ்ந்தாளல்லள். மாறாகத் தீப்பாய்ந்தும் தன் உயிர் போகாமை கண்டு கலங்கினாள். ‘தீயும் தீண்டாத் தீவினையாட்டி ஆயினேனே. அந்தோ! யான்யாது செய்வேன்?’ என வாய் விட்டுப் புலம்பி வருந்தினாள். அப்போது, “ஆதிரை! உன் அரும் பெறற் கணவன் சாதுவன் சாவுற்றிலன். கலம் கவிழக் கடலில் வீழ்ந்த அவன், கடல் நீர்க்குப் பலியாயி னல்லன், அலைகடல், அவனை, ஓர் தீவிற் கொண்டு சேர்த் துளது. நாகர் எனும் இனத்தவர் வாழும் அம்மலைநாடு சேர்ந்த அவன், ஆங்கு நலமே உள்ளான். ஆங்குப் பல்லாண்டு இருப்பதும் செய்யான். சின்னாட்களுக் கெல்லாம் சந்திரதத்தன் எனும் வணிகனோடு வந்து சேர்வான். வருந்தாது வீடடைக” என்ற ஒரு குரல், வானிடை ஒலித்தது.

வானத்தில் எழுந்த அவ்வுரையைக் கேட்டு ஆதிரை அகம் மகிழ்ந்தாள். அவள் மனத்துயர் மறைந்தது, பொய்கை நீரிற் புகுந்தாடி எழுவாள்போல், ஈமத்தீயை விட்டு வெளியேறினள். கடல் வாய்ப்பட்டும் கணவன் உயிர்நீத்திலன் என்பது மடடுமன்று; அவன் வான் பொருளோடு வந்தும் சேர்வான் என்ற செய்தி, சிந்தையில் மகிழ்ச்சியை நிரப்ப அம்மனநிறைவோடு மனை புகுந்தாள் கண்மணி அனைய கணவன் கலம் ஊர்ந்து கடிதின் வந்து அடைவான் வேண்டி, அறம்பல மேற் கொண்டுஆ.-