பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

உயிர், உடலை விட்டு மிக்க நெடுந்துரம் செல்வதை, நீ கனவிலும் கண்டிருப்பை; அவ்வாறு போகும் உயிர், அது அதுகாறும் புகுந்திருந்த உடல் செய்த வினைப் பயனுக்கு ஏற்ற உடலில் சென்று புகும். இவ்வுண்மையை உன் உள்ளத்தில் நிறுத்தி உணர்தல் வேண்டும்” என்று விளக்கம் அளித்தான்.

வாணிகன் கூறிய விளக்கத்தைக் கேட்டான் குரு மகன். உடனே இருக்கை விட்டெழுந்து, சாதுவன் கால்களில் வீழ்ந்து வணங்கினான். “நல்லறிவுடையோனே! நான் அறிய அறம் உரைத்த உன்னை, ஒன்றுவேண்டுகிறேன். கள்ளையும், ஊனையும் கைவிட்டால் என்உடல் வாழாது; என் உடல் வாழாதாயின் என் உயிரும் வாழாது. ஆகவே, அவ்வறங்களை விடுத்து, என்னுல் ஏற்றுச் செய்யவல்ல வேறு அறங்களை அறிவிப்பாயாக” என வேண்டிக் கொண்டான்.

நாகர் தலைவன் நல்லறிவு பெற்றமை கண்டு சாதுவன் பெருமகிழ்வு எய்தினான். “நாக! நின் நிலைக்கேற்கும் நல்லறங்களும் உள. வாணிகம் கருதிவரும் மக்கள் வங்கம் கவிழ, இவண்வந்தடைவாராயின், அவரைக் கொன்றுண்பதைக் கைவிட்டு அவர் தம்மூரடைய அவர்க்குத் துணைபுரிவாயாக. முதுமை பெற்று இறக்கும் நிலை புற்ற மாவினம் தவிர்த்து, வேறு விலங்கினங்களை வேட்டையாடிக் கொல்லாதே; ஏற்புடைய இவற்றின் வழி நின்று விழுமிய வாழ்வு பெறுவாயாக” என்று கூறினான்.

சாதுவன் கூறியன கேட்ட நாகர் தலைவன், “சாதுவ! நீ சாற்றிய நல்லறம் எமக்குச் சாலவும் பொருந்தும்; இன்று முதல் நீ காட்டிய வழியில் நின்று அறம்வளர்ப்பேன். எமக்கு அறம் உரைத்து எம்மை வாழ்வித்த