பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26


சாலி, காசிநகர் விட்டுக் கால் கடுக கடந்து தமிழ், நாடடைந்தாள். சோணாட்டைக் கடந்தாள். பாண்டி நாட்டின் பெரும் பகுதியையும் கடந்து விட்டாள். பாண்டி மன்னருக்குப் பெருமை தரும் அருஞ்செல்வமாய முத்துக்களைத் தரும் சிறப்பு வாய்ந்த கொற்கைத் துறையையும் கடந்து தென் திசை நோக்கிச் செல்லத் தொடங்கினாள். ஒரு காவதம் கூடக் கடந்திருக்க மாட்டாள். அவளால் மேலே, நடக்க இயலவில்லை; காசி நகர் விட்டு நீங்கும்போதே, சாலி கருவுற்றிருந்தாள். இப்போது கருவுயிர்க்கும் காலம் நெருங்கியிருந்தது, கால்கள் நடை மெலிந்தன, உடல் தளர்ந்தது, உள்ளம் சோர்ந்தது, அண்மையில் இருந்த ஒர் ஆயர்பாடியை மெல்ல அணுகினாள். அப்பாடியை அடுத்திருந்த மலர்ச் சோலையில் ஓர் ஆண்மகவை ஈன்றாள். முறை கேடுற்றுப் பிறந்த மகவாதலாலும், பிறந்த மகவைப் பேணிக் காக்கும் ஆற்றல், தனக்கு அப்போது இல்லை யாதலாலும், அம்மகவின்பால் அவளுக்கு அன்பு சுரக்க வில்லை. அருளையும் அறத்தையும் எண்ணிப் பாராது, பிறந்த மகவை, அம் மலர்ச் சோலையில் மறைவிடம் ஒன்றில் இட்டு அகன்றாள்.

தனித்துவிடப் பெற்ற மகவு, தாய்ப்பால் பெறாது பசியால் துடித்து, வாய்விட்டுக் கூவி அழத் தொடங்கிற்று. குழவியின் கூக்குரல் கேட்ட கன்றீன்ற பசு ஒன்று ஆங்கு ஓடி வந்தது. குழவியைக் கண்டது; அதன்பால் அப்பசுவிற்கு அன்பு சுரந்தது. தான் ஈன்ற கன்றைக் கண்டதேபோல் களிப்புற்றது. அன்பொழுகத் தன் நாவால் பலமுறை நக்கிற்று. தன் கன்றுண்ணும் பாலை, அக்குழவிக்கு ஊட்டிற்று. பசுவின்பால் குடித்துப் பசியொழித்தது அப்பச்சிளங் குழவி இவ்வாறே இரவு