பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

போக்குதற்குத் துடித்தான். அதனால் அவள் தரும் காதல் இன்பத்தைப் பெற அவள் அடிபணியும் கருத்தோடு அவள் புகுந்திருந்த பூஞ்சோலைக்குச் சென்றான்.

அப்போது ஆங்கு அவன் கண்ட ஒருகாட்சி அவனுக்குச் சினமூட்டிவிட்டது. வானூடு செல்லும் வழக்கம் உடையோனும் செயற்கரிய செய்யும் பெரியோர்களையே சார்ந்து வாழ்வோனும், அதனால் சாதுசக்கரன் எனும் காரணப் பெயர் பெற்றோனும் ஆய ஒரு முனிவன் மணி பல்லவம் சென்று, அதற்கு அணித்தாக உள்ள சிறு திவில் இடம்பெற்ற சமந்தம் எனும் மலையுச்சியில் பொருந் தியிருந்தியிருக்கும் புத்தன் திருவடிகளை வணங்கி வழி பட்டு மீளுங்கால், உச்சிப் பொழுது ஆய்விட்டமை அறிந்து, இலக்குமி புகுந்திருந்த பூஞ்சோலையில் இறங்கினான். கணவனை எதிர் நோக்கியிருந்தவள், தன்முன் புதியான் ஒருவன் திடுமென, அதுவும் வானத்தினின்றும் இழிந்து வந்து தோன்றியதைக் காணவே, அவள் அறிவு மயங்கிவிட்டது. உள்ளத்தில் நடுக்கம் எழுந்தது; அது உடலயும் பற்றிக்கொண்டது; வாயினின்றும் சொற்கள் வெளிப்பட்டில. தன்னை அறியாதே அவன் தாளடி பணிந்தாள். இலக்குமியின் வாடிய நிலையினையும், வணக் கத்தையும், அவன் முன் வந்து நிற்கும் புதியோனையும் கண்டு, இராகுலன் கடுஞ்சினம் கொண்டான். உடனே மனைவியின் மனக்குறை தீர்த்து அவளை மகிழ்விக்க வந்த அவன், “ஏடி! நின்னால் வணங்கத்தக்க இவன் யாவன்?