பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

பசி போக்கும், அமுதசுரபி யெனும் உயர்ந்த உண் கலத்தைப் பெற்றாள். அதன் பயனாகவே மணிமேகலா தெய்வத்தின் துணையும் புத்த பிடிகைக் காட்சியும் கிடைக்கப் பெற்றாள். அவற்றின் துணையால் தன் பழம் பிறப்பை உணர்ந்து கொண்டது அந்நல்லறப் பயனே; அதுவே, தன் மீது காதல் கொண்டு அதன் காரணத்தால் கொலையுண்ட அரசமகன் உதயகுமரன், பழம் பிறப்பில் தன் கணவனாகிய இராகுலனே என அறிந்து அவன்பால் மனம் நெகிழ்ந்து மாசுபடஇருந்த மணிமேகலையைத் தடுத்துத் தவநெறிகெடாத் தூயோளாகத் துணை புரிந்தது. பழம் பிறப்பில் தனக்குத் தமக்கையராய்த் தோன்றிய தாரையும் வீரையும் இப்பிறவியில் முறையே சதவியும், சுதமதியுமாகப் பிறந்து தனக்குத் தாயாகவும் தோழியாகவும் நின்று துணை புரியச் செய்ததும், இலக்குமி அன்று ஆற்றிய அறப்பயனே ஆகும்.

கணவன் செய்யும் கேட்டினைத் தவிர்க்க இயலும் காலத்தில் தவிர்த்து அவனுக்கு வரவிருந்த கேட்னைக் கொடுத்தும், அதைத் தவிர்க்கமாட்டாது போக, அவன் அக்கேட்டினைச் செய்து கெட்டழிந்த போது அவனோடு தானும் இறந்து, இறவாப்புகழ் பெற்ற இலக்குமி, பின்னர் எடுத்த பிறவியிலும், மணிமேகலை யுருவில் தவநெறி மேற்தொண்டு பவவினை அறுத்த பெரியோன் ஆயினாள். வாழ்க அவள் பெரும் பெயர்!