வை.மு.கோ. 103-வது நாவல்
172
அப்போதுதான் விழித்துக் கொண்ட டாக்டர், இந்த பரம ரகஸியத்தை வெளியிடவே கூடாது; எப்படியும் தன்னைத் தன் பிதா அடையாளம் தெரிந்து கொள்ள முடியாது. ஏனெனில், தன்னை வெகு இளமையில் பார்த்தது. அதோடு இப்போது தாடியும், மீசையும் வளர்ந்திருப்பதால், முதலே தெரிந்து கொள்ள முடியாது. ஆகையால், இந்த ரகஸியத்தை—மர்மத்தை—மறைத்தே பேசி, நாம் இவ்விடத்தை விட்டு எப்படியாவது, வேறு ஜெயிலுக்கு மாற்றிக் கொண்டு போய் விட வேணும். என்ற உறுதி தோன்றியது. அதனால், தன்னைத் தான் மெல்ல சமாளித்துக் கொண்டு, “ஸார்! உயிர் போகவில்லை. ஆனால், போய் விடுமோ என்கிற சந்தேகமாயிருக்கிறது. உடம்பிலிருந்து, ரத்தம் அதிகமாய்ப் போய் விட்டதால், மருந்துகள் வேலை செய்வது கஷ்டம் என்று தோன்றுவதால், என் சரீரத்திலிருந்து முதலில் வேண்டிய அளவு ரத்தத்தை ஏற்றுவதற்காகவே யோசனை செய்கிறேன். உத்தரவு கொடுத்தால், ஒரு கைதிக்கு ஒரு கைதி இந்த முறையில் உதவி செய்தால், கட்டாயம் பிழைத்துக் கொள்ளலாம். நான் திட சரீரமுடையவன் ; ஆகையால், என்னுடைய ஆவலைப் பூர்த்தி செய்ய வேண்டும்” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். அதிகாரியும் உடனே உத்திரவு கொடுத்து விட்டார்.
டாக்டருடைய உள்ளத்தில் செய்யும் வேதனையும், நடக்கும் போராட்டமும் சொல்லி முடியாது. தன் பிதாவைப் பற்றி, அவன் எந்த விதமாகவும் நினைக்கவுமில்லை, எதிர்பார்க்கவும் இல்லை. அந்த காலத்தில், கொலைக் குற்றத்திற்காக அந்தமானுக்கு அனுப்பிய கைதியைப் பற்றி, யார்தான் என்ன எதிர் பார்க்க முடியும்? இத்தகைய சோதனையாய், இதே சிறையில் கைதியாகவே கண்டு துடிக்கும்படியான விதியமைந்தாலும், தன்னருமைத் தாயாரின் ஸௌமாங்கல்ய வளர்ச்சிக்கா-