பக்கம்:சாமியாடிகள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

சு. சமுத்திரம்

174 சு. சமுத்திரம்

"அடடே. அலங்காரி மயினியா. என்ன இந்தப் பக்கம்?"

"நீ வாரன்னுதான் போக்குக் காட்டி வாறேன். நீ புதுச் சினேகத்துல பழைய சினேகிதத்த மறந்துட்டே என்னாலதான் மறக்க முடியல..."

"நம்ம சினேகிதத்த மறந்தா. ஒங்களக் கூப்புடுவனா. சோளத் தோட்டம் பக்கமா போகலாம் மயினி. போயி ரொம்ப நாளாச்சு..."

"நீ ஒருத்தன் எதுக்குவே எங்க குடும்பத்து பொம்புள பிள்ளியள துரத்திட்டே."

"ஏதோ புத்திகெட்ட தனமாப் பண்ணிட்ன்ே."

"என் பொழப்புல வேற மண்ணள்ளிப் போட்டுட்டே."

"நீங்க பீடி சுத்திதான் என்கிட்ட காசு வாங்கணுமா. ஒங்களுக்கு இல்லாத பணம் எனக்கு இருந்தென்ன. இல்லாட்டா என்ன..."

"போவட்டும். அம்மன் கொடைக்கு நாங்க வீடியோ. அவங்க என்னவாம்."

"என்கிட்டே அதெல்லாம் கேட்கப்படாது.”

அலங்காரி, ஏசெண்டின் விரல்களைப் பிடித்து, சொடக்குப் போட்டாள். பெருவிரலை அழுத்தினாள். ஏசெண்டு, அலங்காரியின் ஏசெண்டாக சுருண்டான்.

"பதினாறு எம்மம்மாம். பெரிய துணி கட்டுவாங்களாம். நீங்க வெறும் வீடியோ. அவங்க பதினாறு எம்எம் படுதா."

"அப்படியா. பதினாறுக்கு மேலயும் ஏதாவது இல்லாமலா இருக்கும்? நல்ல சமயத்துல சொல்லிட்ட. ஆமாம் கொழுந்தா. ஒங்க குடும்பத்துக்காரன்களை ஊர்ல என்ன சொல்லுதாங்க தெரியுமா. கோலவடிவுக்காக கரும்பட்டையான் கூட்டத்துல நாயி மாதிரி காத்துக் கிடக்கியளாம்.”

"அப்படித்தான் ஆயிப்போச்சு..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/176&oldid=1243704" இலிருந்து மீள்விக்கப்பட்டது