பக்கம்:சாமியாடிகள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

சு. சமுத்திரம்

204 சு. சமுத்திரம்

"நீ சொல்றதும் சரிதான். இப்போ வார சினிமாப்படங்கள்லயும் எவனாவது ஒரு பயல் கண்ணுல கண்ணாடி மாட்டி கழுத்துல காமிராவ தொங்கப்போட்டு ஜீப்புலயோ, மோட்டார் பைக்குலயோ வந்தா... எந்த கிராமத்துப் பொண்ணயும் இழுத்துட்டுப் போயிடலாமுன்னு ஒரு எண்ணத்தை ஏற்படுத்துறாங்க. இவனுவளும் சினிமாக்காரங்களாம். நிழல நிசமா நினைக்கிற பயல்க.."

"எங்க துளசிங்கத்துக்கு இந்தப் புத்தி ஆகாது. இந்தக் காவாலி பயலுவள எதுக்காவ கொண்டு வரணும்."

"சரி. பொறுத்திருந்து பார்ப்போம். இப்போ குட்டம்பட்டில பீடியைப் போட்டுட்டு வருவோம்."

"ரஞ்சிதம் சொல்லிட்டாள்லா. இன்னுமா கையில கல்ல தூக்கிட்டு நிக்கிய பைத்தியமுன்னு நெனப்பாவ..."

"மொதல்ல ஒன் கையில இருக்க கல்ல கீழ போடு பைத்தியம்." எல்லாப் பெண்களும் பீடித்தட்டுக்களை எடுத்து கொண்டார்கள். அவற்றில் பிடிகள் வண்டல் வண்டலாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அந்தத் தட்டுகள் அந்த அடுக்கால் ஆயிரம் கண்ணுடைய அதிசயத் தட்டுக்களாகத் தோன்றின. குட்டாம் பட்டிக்குப் போகும் வழியில் தார்ரோடு பக்கமாக நடந்து வந்தார்கள். அதற்குக் கிழக்குப் பக்கம் என்ன தகராறு? என்ன கூட்டம்? எலி டாக்டர் எதுக்காவ இங்க வந்தார். "ஏடி கொஞ்சம் நில்லுங்க. ரஞ்சிதம் நீயும் நில்லு. என்னான்னு பார்ப்போம்."

காத்துக் கருப்பன்களில் அக்னி ராசாவின் தந்தை ராமய்யாவுக்கு அடுத்தபடியான வசதியுள்ளவர் முத்துப்பாண்டி. ஆகையால் அண்ணாச்சி ராமய்யாவுக்குப் போட்டியாக ராமய்யாவின் தம்பி பற்குணத்தைப் பார்த்துக் கையாட்டிப் பேசினார்.

"எலி டாக்டர் மச்சான் மெனக்கெட்டு நம்ம வீட்டு வாசலுல வந்து கெஞ்சுகிறார். நம்ம மாரியம்மன் கோயில் சுடலைமாடன் உத்தரவு கேட்கும்படியாய். உத்தரவு போடப் போறதாய் சொல்லுதார். இது நமக்குப் பெருமைதான?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/206&oldid=1243752" இலிருந்து மீள்விக்கப்பட்டது