பக்கம்:சாமியாடிகள்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302

சு. சமுத்திரம்

302 சு. சமுத்திரம்

துளசிங்கம், அவளைத் தள்ளிய வேகத்தில் அவள் கீழே விழுந்தாள். விழுந்த வேகத்தில் தரைக்குச் சிவப்புச் சாயம் போட்டாள். துளசிங்கம் சிறிது நேரம் அவளை முறைத்துப் பார்த்துவிட்டு, வேகவேகமாய் வீட்டிற்குள் நுழைந்தபோது, அவள் மெள்ள மெள்ள எழுந்தாள். அவள் நெற்றியில் பெருக்கெடுத்த ரத்த ஊற்றைப் பார்த்த பெண்கள் அச்சச்சோ போட்டார்கள். ஆளுக்கு ஆள் நினைத்ததைப் பேசினார்கள். இன்னிக்கு. ஊர்ல. கூட்டம் போட்டு ஏதாவது பண்ணனும். பாவமா. இருக்கு. இவளுக்கு இதுதான் சரி. இதைப் பாத்துட்டாவது. மத்தவளுவ திருந்தனும். இது பொண்ண பெத்தவங்களுக்கும், அவளப் பிடிச்சவங்களுக்கும் நடக்கிற விவகாரம். நாளைக்கே ஒண்ணாயிடு வாங்க. நாம இன்னிக்கு தலையிட்டு. நாளைக்கு ஏன் பொல்லாப்பாகணும். ஆனாலும் ஒருத்திய. இப்படி. முச்சந்தியில. அனாதரவா விடுறது அநியாயம்.

கோலவடிவுக்கு ஊரார் பேச்சு காதில் விழவில்லை. அடிமேல் அடியாய் நடந்தாள். கூன்பட்டு, கண் குருடுபட்டவள் போல், நடந்தாள். வலித்த நெற்றியை மட்டும் அவ்வப்போது வலது கை பெருவிரலால் அழுத்திவிட்டு, அழுத்திவிட்டு, அழுத்தமின்றி நடந்தாள். நடந்து கொண்டே போனாள்.

எலி டாக்டர் வீட்டுக்குள், செம்பட்டையான் பீடிப் பெண்கள் கோபங் கோபமாய் கத்துவது லேசாய் கேட்டது. புஷ்பம் ஒப்பாரிபோட்டு அழுவதும், ஏதோ ஒரு அழுகைச் சத்தம் போல மட்டுமே அவளுக்குக் கேட்டது.

குழந்தை நடப்பது போலவும், கிழவி நடப்பது போலவும், இலக்கு இல்லாமல் நடந்தாள். இடந்தெரியாமல் நடந்தாள். செம்பட்டையான் பகுதிக்கும் கரும்பட்டையான் பகுதிக்கும் எல்லை போலான பழைய காலத்து இளவட்டக் கல்லருகே கண்களை மூடியபடி உதடுகளைப் பிரித்தபடி நின்றாள். தொலைவில் நின்ற வாடாப்பூவும், சந்திராவும், கூப்பாடு போட்டபடியே அவளைப் பார்த்து ஒடி வரப் போனார்கள். கரும்பட்டையான்கள், அவர்களை, கைகளைப் பற்றி வீட்டுக்குள் கொண்டு போனார்கள்.

அந்தப் பக்கமாக ஒரு போலீஸ்காரருடன் அலங்காரி வந்தாள். கோலவடிவு என்ன செய்கிறாள் என்பதைப் பார்ப்பதற்காக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/304&oldid=1244167" இலிருந்து மீள்விக்கப்பட்டது