பக்கம்:சாமியாடிகள்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

303

சாமியாடிகள் 303

துளசிங்கமும் தற்செயலாக வருவதுபோல், வந்து கொண்டிருந்தான். கோலவடிவையே, உதடுகள் துடிக்க உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த அலங்காரி, எதுவும் நடக்காததுபோல் நடக்கப் போன துளசிங்கத்தின் கையைப் பிடித்து இழுத்தபடியே மன்றாடினாள்.

"ஏய் ராசா. சித்தி சொல்லுறதக் கேளுடா. பெண்பாவம் பொல்லாதுப்பா. நம்பள தஞ்சமுன்னு வந்தவள சேத்துக்கப்பா..."

"என்ன சித்தி. ஒன் பேச்சு ஒரு மாதிரி இருக்குது."

"ஆமாம்பா. யோசிச்சு பார்த்தா நல்லதா தெரிஞ்சுது, இப்போ நடத்தி பார்க்கும்போது மனசுக்கு கஷ்டமா இருக்குதுடா. சித்தியோட முகத்துக்காகவாவது."

"ஏய் அலங்காரி. ஒன்னை மாதிரி கண்டவன் கூடல்லாம் ஒடிப்போறவள் எனக்கு பெண்டாட்டியா வரணுமா?"

"எப்பா.. என் மவனே."

"யாருழா. ஒனக்கு மகன்? ஒன் மகளே எவனுக்குப் பிறந்தான்னு ஒனக்குத் தெரியுமாழா."

"எப்பா இதுக்குமேல பேசாதப்பா."

"ஒனக்கு வயசாயிட்டு. இவள என் தலையில போட்டால். ஒன் வியாபாரத்த நல்லா நடத்தலாமுன்னு பாக்கியா."

துளசிங்கம் காறித் துப்பிவிட்டு, தன்பாட்டுக்கு நடந்தான்.

அலங்காரி போகிற துளசிங்கத்தையே வெறித்துப் பார்த்தாள். 'இவனை பயன்படுத்த நெனச்சேன். இவனோ... என்னையே பயன்படுத்தி இருக்கான். மோசம் போயிட்டேனே. நான் பெத்த மவள். கல்யாணத்துக்குப் பிறகு என்னை ஏறிட்டுப் பார்க்காம போன நாளுல இருந்து என் மனசு. என்ன பாடு படுதோ, அப்படித்தானே. இந்த பழனிச்சாமியும். பாக்கியமும் படுவாவ...'

இதற்குள் , எ லி டாக் டரி ன் மனை வி யும், ஏழெட் டு செம்பட்டையான்களும் சத்தம் கேட்டு ஓடி வந்தார்கள். எலி மனைவியின் கையில் துடப்பம். அவன்கள் கையில் சாட்டைக் கம்பு. கருங்கல்லு. வாதமடக்கிக் கம்புகள். ஒருத்தன் கத்தினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/305&oldid=1244168" இலிருந்து மீள்விக்கப்பட்டது