பக்கம்:சாமியாடிகள்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




40

எல்லாம் ஏழு நிமிடங்களில் முடிந்துவிட்டன. அரைகுறை இல்லாமல், முழுமையாக முடிந்து போனது. கோலவடிவு அந்த சிலைமேல் சிலையாகக் கிடந்தாள். அம்மன் மார்பில், பின் தலையைச் சாய்த்துப் போட்டாள். கண்கள் மேல்பட்டு, அம்மனின் கண்களையே உற்று நோக்குவது போல், அடங்கிக் கிடந்தாள்.

இதற்குள் போலீஸ்காரர்களின் கூக்குரலால், கண் விழித்த ஊரார், துளசிங்கம் போட்ட ஒலத்தால், ஒடி வந்தார்கள். என்னமோ ஏதோ என்று முதலில் ஓடி வந்தவர்கள், அவர்கள் எதிர்பார்த்ததை விடப் பெரிதாக நடந்ததைப் பார்த்த பயத்தில் திரும்பி ஓடினார்கள். பின்னால் வந்தவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் ஊமை போல் குரலிட்டார்கள். அம்மன் கோவிலை நோக்கி, கைகளை மட்டும் நீட்டி நீட்டிக் காட்டினார்கள். கிட்டே வந்த பெண்கள் எட்ட ஒடினார்கள். சிலர் கண்களை மூடிக் கொண்டே நின்றார்கள். சிலர் ஊரைவிட்டே ஓடினார்கள். கூட்டம் கூட்டமாகக் கூட்டம் சேர்ந்தது. காத்துக்கருப்பன்கள், காரை வீட்டார்கள், செம்பட்டையான்கள், கரும்பட்டையான்கள், பள்ளிக்கூடப் பிள்ளைகள். எலி டாக்டர் மயங்கி, ஒருவர் தோளில் சாய்ந்தார். காஞ்சான் பற்குணத்தை ஆதரவாகப் பிடித்துக் கொண்டார். நாட்டு வக்கீல், பழனிச்சாமி வீட்டைப் பார்த்து ஒடினான். இரண்டு கைகளிலும் விலங்குத் தடங்களை விழுப்புண்கள் போல் கொண்ட திருமலை நொண்டியடித்து வந்தான். தங்கையைப் பார்த்து, கையெடுத்துக் கும்பிட்டான். தனக்குத்தானே முனங்கிக் கொண்டான். 'நான் செய்து மாட்டிக்கப்படாதுன்னு நீ செய்திட்டியாம்மா."

கூட்ட நெருக்கம். கூக்குரல் தாக்கம். யாராலும் பேச முடிய வில்லை. கோலவடிவை நேருக்கு நேராய் பார்க்கவும் முடியவில்லை. உச்சிமுடியைப் பிடித்திழுக்கும் போது ஏற்படும் முகச்சுழிப்புடன் துளசிங்கத் துண்டுத்தலை, ரத்தக் கட்டியில் ஒட்டிப்போய் கிடந்தது. சிவ சிவ என்றார்கள். அய்யய்யோ என்றார்கள். ஆனால் எவருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/313&oldid=1244203" இலிருந்து மீள்விக்கப்பட்டது