உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

சாயங்கால மேகங்கள்

கும்படி கேட்கச் சொல்லுங்கள். அவன் வரச் சம்மதிப்பான். இரட்டை மகிழ்ச்சியோடு வருவான். என்றைக்கு எந்த நேரத்தில் வருகிறான் என்பதை மட்டும் முன்கூட்டியே எங்களுக்குத் தெரிவித்து விடுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்ளுகிறோம்” என்றார் பரமசிவம்.

அந்தத் தாய் கொஞ்சம் தயங்கினாள்.

“ஏதாவது ஏடாகூடமாக நடந்துவிட்டால் என்ன செய்வது?”

கோளாறாக எதுவும் நடக்காது! பார்க்கிலே அந்த நேரத்துக்கு முந்தியிருந்தே நாங்க தயாரா காத்திருப்போம். இப்போ நாங்க அவனுக்குக் கற்பிக்கிற பாடத்துக்கு அப்புறம் உங்கள் பெண் இருக்கிற திசைப்பக்கம் அவன் தலைவைத்துக்கூட படுக்கமாட்டான்” என்றார்கள் அவர்கள்.

“சொல்றபடி கேளுங்கம்மா! வேற யாரும் இந்த விஷயத்திலே நமக்கு உதவி செய்யமாட்டாங்க...” என்று சித்ராவும் தேவகியும் அந்த அம்மாளிடம் மன்றாடுவது போன்ற குரலில் கூறினார்கள்.

நீண்ட யோசனைக்குப் பிறகு அந்த அம்மாள் சம்மதித்தாள்.

இரண்டு தினங்களுக்குப் பின் மறுபடி சித்ராவும் தேவகியும் பூமியைத் தேடி மெஸ்ஸுக்கு வந்தார்கள்.

“நாம் விரித்த வலையில் அந்தக் கரடி விழப் போகிறது. நாளைக்கு மாலை ஏழு மணிக்கு அவனை நாகேஸ்வர ராவ் பூங்காவில் தன்னை வந்து சந்திக்கும்படி கேட்டுச் சம்மதிக்கச் ‘ செய்துவிட்டாள் அந்தப் பெண்” என்றாள் சித்ரா.

“அவுன் நேரே பார்க்குக்கு வரட்டும். அவனைச் சந்திப்பதற்கு அரை மணிக்கு முன்னால் அவளை அழைத்துக்கொண்டு நீ மெஸ்ஸுக்கு வா; அவளுக்கு விவரங்கள் சொல்லிப் பூங்காவின் எந்த இடத்தில் சந்திப்பு நிகழ