பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
12
சாயங்கால மேகங்கள்
 

மாம்பலத்தில் பஸ் ஸ்டாண்டு அருகேயும் சிவா விஷ்ணு கோவில் அருகேயும் சவாரிகள் கிடைக்கிற மாதிரி இந்த இடத்தில் கிடைக்காது. ஆட்டோ மினிமம் ஒரு ரூபாய் எழுபது காசுக்கு உயர்ந்த பின் பலர் ஆட்டோவில் டோவதையும் விட்டுவிட்டார்கள். டாக்ஸிக்காரர்கள் சவாரி கிடைக்காமல் ஈயோட்டிக் கொண்டிருந்தார்கள் என்றால் ஆட்டோக்காரர் கொசு ஓட்ட வேண்டிமிருந்தது.

அவனுக்குப் பின் வந்து நிறுத்திய மூவருமே பொறுமை இழந்து சவாரி தேடி வேறு இடத்துக்குப் புறப்பட்டுப் போய்விட்டார்கள்.

அவன் மட்டும்தான் அந்த இடத்தையும், அதன் இனிய நினைவுச் சார்புகளையும், நிழலையும் விட்டுப் போக மனமின்றி, அங்கேயே காத்திருந்தான்.

பாரதியார் கவிதைகளைப் படித்துக் கொண்டிருந்த போதே மனம் மீண்டும் சித்ராவின் திசையில் திரும்பியது.

சித்ரா தன்னைப்பற்றி என்ன நினைத்திருப்பாள் என்று கற்பனை செய்ய முயன்றன் பூமிநாதன், தான் அவளைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பதுபோல் அவளும் தன்னைப் பற்றி நினைப்பாள் என்றே அவனுக்குத் தோன்றியது.

நிரத் சௌத்ரியையும், மகாகவி பாரதியாரையும் இரசிக்கும் அளவு ஐ. க்யூ. உள்ள ஓர் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுகிறவனை அவளுடைய வாழ்நாளிலேயே முதல் தடவையாக இன்று காலையில்தான் அவள் பார்த்திருக்கவேண்டும் என்று தோன்றியது.

பத்து ரூபாயை எடுத்து இனாமாக நீட்டினால், அது போதாது என்ற கோபத்தில் எடுத்து நீட்டியவரை உதாசீனப்படுத்திச் சீண்டிவிடும் கொச்சையான ராஜதந்திரத்தோடு, “வேணாம் நீயே வச்சிக்க”.. என்று திருப்பித் தரும் ஆட்டோ , டாக்ஸி டிரைவர்களே நிரம்பிய நாகரிகமயானமான சென்னை நகரத்தில் தயவு செய்து நான் யோக்கியனாக இருப்பதற்கு விலை நிர்ணயித்து விடாதீர்கள்’ -- என்று புன்னகையோடு