சாயங்கால மேகங்கள்
229
பணலாபத்தால் மனிதத் தன்மை இழப்பவர்களை நம்பி எந்தப் போராட்டத்தையும் வெற்றிகரமாக நடத்த முடியாது!”
“சீக்கிரமே நம்முடைய முத்தக்காள் விஷயத்திலும் அது நிரூபணமாகப் போகிறது பாருங்கள்.”
சித்ரா இவ்வாறு கூறியிருந்தாலும் பூமி முத்தக்காள் அவ்வளவு தூரம் துணிந்து தங்களை விரோதித்துக் கொள்வாள் என்பதை அப்போது நம்பவில்லை.
“மெஸ்ஸில் வேலை பார்த்த ஒரு பையன் காணாமற் போனதற்காகத் தானே வேலைமெனக்கெட்டுத் தேடி அலைவது அவளுக்குப் பிடிக்காமலிருக்கலாம். தானும் சித்ராவும் மிகவும் நெருக்கமாகப் பழகுவது அவளுக்குப் பிடிக்காமலிருக்கலாம். அந்த பழக்கத்தை அவளால் பொறுத்து கொள்ள முடியாமலும் இருக்கலாம். ஆனால் அதற்காக அவள் தன்னுடைய விரோதத்தைத் தேடிக் கொள்ள முன்வருவாள் என்று அவனால் நம்பமுடியவில்லை. சித்ரா உறுதியாகக் . கூறினாள்.
“நானும் நீங்களும் அவர்கள் கிழித்த கோட்டைத் தாண்டாமல் அவர்கள் இழுத்த இழுப்புக்கு வரமாட்டோமென்று புரிந்து விட்டால் ஹோட்டல் நிர்வாகத்துக்குக்கூட வேறு ஏற்பாடு செய்யத் தயங்கமாட்டார்கள்.”
“இது அதிகப்படியான கற்பனை சித்ரா! கொஞ்சம் மிகைப்படுத்தி நினைப்பதன் விளைவு இது. முத்தக்காளுக்கு அத்தனை துணிவு கிடையாது என்பதை நான் அறிவேன்.”
“போகப் போகத் தெரிந்து கொள்வீர்கள்.”
இந்த உரையாடல் முடிந்து அன்று காலை ஒன்பது மணியளவில் மறுபடி மெஸ்ஸுக்குத் திரும்பிய போதே பூமிக்குச் சித்ரா கூறியது பலித்திருப்பது புரிந்தது.
அவன் மெஸ்ஸில் நுழைந்த போது முகத்தில் பளீரென்று விபூதி குங்குமப் பொட்டுடன் காதில் பூ அணிந்த இளைஞன்