88
சாயங்கால மேகங்கள்
ஆகித் திரும்பிய போது மெஸ் இருந்த நிலைமையைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனாள்.
ரிக்க்ஷாவிலிருந்து இறங்கித் தன் கண்களையே நம்ப முடியாமல் “என்ன தம்பி இதெல்லாம்? அதுக்குள்ளாற எப்பிடி... இதெல்லாம் செய்ய முடிஞ்சுது?” என்று வியந்த முத்தக்காளை மலர்ந்த முகத்தோடு வரவேற்றுக் கைத்தாங்கலாக உள்ளே அழைத்துச் சென்றான் பூமி..
முத்தக்காளுக்கு மெஸ்ஸிலேயே பின் பக்கத்தில் இருந்த ஒரு சிறிய அறைதான் இருப்பிடம். அங்கே அழைத்துச் சென்று கயிற்றுக் கட்டிலில் விரிப்பு விரித்துத் தலையணை போட்டு அவளைப் படுக்கச் செய்தான் பூமி.
“தம்பீ!...” என்று எதையோ உணர்ச்சி வசப்பட்டுச் சொல்ல ஆரம்பித்த அவளை “ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்! அப்புறம் பேசலாம்” என்று கூறி விட்டு வேலைகளைக் கவனிப் பதற்காகச் சென்றான் பூமி.
செயலுக்குச் சோம்புகிறவர்களை விட செய்ய நினைக்கவே சோம்பல்படுகிறவர்கள் ஒரு தேசத்தின் உடம்பில் ஊளைச் சதை போல வேண்டாதவர்களாகத் தங்கி இருப்பவர்கள்.
முத்தக்காளுக்கு ஒரு பிரமிப்பே ஏற்பட்டிருந்தது, எதிரிகள் துவம்சம் பண்ணிவிட்டுப் போயிருந்த நிலையில் நீண்ட காலத்துக்கு அந்த மெஸ்ஸை ஒழுங்கு செய்து நடத்தவே முடியாமற் போகுமோ என்று பயந்திருந்தாள். அப்புற-