பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

5



அங்கே? சந்தனசோப்பும் சௌரி முடியும் விற்கும் கடைகளா? கில்டு நகைகளும் சிலேட்டும் பென்சிலுமா அங்கே வியாபாரம்? தேன் குழலும் தேனீர் கடையும் முதலிடம் பெறுமா அதனுள்ளே? ராஜா மந்திரி படமும் ரங்கல் ராட்டினமும் இருக்குமா? க்ஷவரக் கத்தி, பவர் சோடா, சூடான பிரியாணி, சுகுந்த பீடா வீரகும் கடைகளா அங்கே? ரப்பர் வளையல், ராணி மார்க் ப்ரோச், பேஸ் பவுடர், பெண்களுக்கு வேண்டிய ரிப்பன் ஆகிய அவ்வளவு சாமான்களையும் சேர்த்து வைத்து இங்கே கண்காட்சி என்கிறார்களே! குப்பைத் தொட்டியையும் குதிரை வண்டியையும் நிறுத்திக் காட்டாமல், கொள்ளைக்கண்ணன் கையில் கள்ளச் சாராயத்தை வைத்துக் காட்டாமல் அதோடு விட்டார்களே! அதுவரை மகிழ்ச்சிதான். பல கிராமங்களிலே வாரந் தவறாமல் நடக்கும் சந்தைகளையெல்லாம் ஒன்றாய்த் திரட்டி ஆண்டுக் கொருமுறை நகரத்திலே நடக்கும் இந்தப் பெரிய சந்தைக்குப் பெயர் கண்காட்சி.

அதிசயம்

ஆனால் இதைப்போன்ற பொருள்களல்ல சிட்னி கண்காட்சியில், மக்கள் இதுவரையிலுமே பார்த்திராத பொருள்கள். ஒரு தரம் பார்த்திருப்பினும் மீண்டும் பார்க்க வேண்டுமே என்ற ஆசையைத் தூண்டும் பொருள்கள். உலக மேதைகளின் உருவச் சிலைகள். சீர்திருத்தம் பேசி, மன்னர்கள்