பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

சாய்ந்த கோபுரம்


போதை தானே என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். மாஜினி ஓயாமல் உழைத்தான்—உருமாறவில்லை. சலியாது உழைத்தான்—சஞ்சலம் கொள்ளவில்லை. கடுங்காவலில் கை விலங்குகளோடு தள்ளப்பட்டான்—கண் கலங்கவில்லை. ஏனெனில், அது அவன் கடமை என்றெண்ணிய காரணத்தாலும், களிப்பாலும் ஒருவன் பிறரது இலட்சியத்திற்காக இறக்க முடியும். ஆனால் அவன் வாழ்வதானால் தனது கொள்கைக்காகவே வாழ வேண்டும் என்பது தான் அவன் முடிவு. எங்கே துன்பம் இருக்கிறதோ அங்கே இன்பம் இருக்கிறது என்பது அவனுடைய திடமான நம்பிக்கை. ஒருவன் எப்போதும் வீரனாக வாழமுடியாது; ஆனால், மனிதனாக வாழ முடியும். மேலும் அந்த வாழ்க்கையையும் சுதந்திரமுடையதாக ஆக்க முடியும் என்பது அவனது குறிக்கோள். பலஹீனமான பாமரமக்களின் முன்னேற்றப் பாதையிலே தடைக் கல்லாயிருக்கும் அரச பீடத்தைப் பலமுள்ளோர் பாதையிலே படிக் கல்லாய்ப் போட முடியும் என்பது அவன் கோட்பாடு. உலக வாழ்க்கையின் நோக்கம் பிறருக்கு உதவிபுரிவது தான் என்பது அவன் கொண்டிருந்த முடிவு. வறுமையே தீமையில் தலை சிறந்ததும், குற்றத்தில் கொடியதுமாகும் என்பதே அவன் கண்ட உண்மை.

ஆகவே அன்றுவரை இலக்கியப் பணி புரிந்து வந்த மாஜினி அன்றிருந்த நாட்டுநிலையைச் சரிப்படுத்த சுதந்திர எண்ணத்தை மக்களுக்கு உண்டாக்க