பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

17


பல கட்டுரைகளைத் தீயில் தோய்த்து வெளியிட்டான். அவன் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஏகாதிபத்தியத் திமிர்பிடித்த அரசாங்கத்தின் நெஞ்சில் பாயும் அம்புகளாயின. இலக்கியக் கர்த்தா இன்று புரட்சிக்காரனாய்விட்டான். இவனுடைய இலக்கியத்தைப் புகழ்ந்த மேதைகளெல்லாங்கூட அன்றுதொடங்கி இவனிடம் அதுவரை கொண்டிருந்த மேன்மையைக் குறைத்துக்கொண்டார்கள்.

அபாய மனிதன்

“மேதை” என்று இவனைக் கொண்டாடிய அவர்களே இன்று இவனை ஓர் அபாய மனிதன் என்றனர். பொதுநலவாதி புகழை விரும்பமாட்டான். இதற்கு மாஜினி புறம்பானவனல்ல. ஆகவே மேதைகளின் கண்டனத்தை, மேட்டுக் குடிகளின் மிரட்டலை, இவன் மதிக்கவில்லை. பொதுவாக இத்தாலிய மக்களும் சிறப்பாக இளைஞர்களும், குறிப்பாகத் தானும், இத்தாலிய நாடு விடுதலையடையப் பல துன்பங்களையடைய வேண்டி வரும் என்று தீர்மானித்தான். ஆகவே மாஜினி அது வரை கொண்டிருந்த இலக்கிய ஆர்வத்தைக் கைவிட்டு, ஒரு முழு அரசியல்வாதியாக மாறிவிட்டான். அரசியலைப்பற்றி மாஜீனி எழுதிய கட்டுரைகள் மேன்மேலும் சுதந்திர ஆர்வத்தைத் தூண்டின. அந்த ஆர்வம் எழுத்தோடு நில்லாமல் 1880-ல் பிரான்சில் நடந்த பெரும் புரட்சிக்குச் சற்றுப்-