பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

சாய்ந்த கோபுரம்


பிந்தி நடந்த கார்பனேரி புரட்சியில் கலந்து கொண்டான். பயிற்சி பெற வேண்டுமல்லவா? அதற்காக அந்தக் குற்றத்திற்காக 6 மாத சிறைத் தண்டனை அடைந்தான். அரசாங்கம் இப்போதுதான் ஒரு முதல் எதிரியையுண்டாக்கியிருக்கிறது. எதிர்ப்பவனும் இப்போதுதான் தோன்றியிருக்கிறான். அந்த 6 மாதத்தண்டனைக்குச் சவோனக்கோட்டைச் சிறையில் தள்ளப்பட்டான். காரணமில்லாமலே பலரைச் சிறையில் தள்ளும் அரசாங்கத்தில் உள்ள ஒரு நல்ல மனிதனுக்கு இருப்பிடம் சிறைச்சாலை தானே என்று சிரித்தான் மாஜினி. சுற்றிலும் சுவர்கள், குறுக்கே கம்பிகள், உள்ளே நான், வெளியே என் இருதயம், எழுத்துக்கள் என்னைப் பின்பற்றும் மக்கள் வெளியிலே, வழிகாட்ட வேண்டிய நான் உள்ளே, இதுவே ஒவ்வொரு சுதந்திர மனிதனுக்கும் படிப்பினை. இதைவிட நான் வேறு என்ன அவர்களுக்குச் சொல்லி விட முடியும். சிறையில் 6 மாத ஓய்வென்றால் உறங்கிக் கழிப்பதற்கா? உறக்கந்தான் எப்படி வரும்? உறங்காமல் சிந்தித்துக்கொண்டிருப்பதற்காகத் தான் வேண்டிய உதவிகள் செய்துவைத்திருக்கின்றார்கள்.

சிறையில்

பக்கத்து அறையில் எவனோ ஒருவன் பயங்கரக்கனவு கண்டு அலறிக்கத்துகிறான். அதற்கடுத்த அறையில் எவனோ ஒருவன், மகனே! மகனே! என்று கத்துகிறான். பாவம், அவன்