பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

21


யோடு ஏற்றுக்கொள்ள முன் வந்தான். ஆல்ை, அந்த உரிமையை அ வ னு க் கு அன்றைய மூவல்லரசுகள் தரமறுத்தன. வீரம் செறிந்த அவன் உள்ளத்தையும், உள்ளம் கெட்டித்தள்ளிய உயர் வான எண்ணங்களையும் ஒவ்வொன்ருகச் சமூகக்தில் பரப்ப எண்ணினன். இதற்கு உறுதுணே வேண்டும், கட்டுக்கோப்பான கழகம் வேண்டும். சட்டரீதியான அல்லது சக்தர்ப்பத்திற்கேற்ரும் போல் சட்டவரம்பைத் காண்டிக்குதிக்கும் தன் மானத் தொண்டர்கள் வேண்டும். உடல், பொருள் ஆவியாகிய அத்தனேயும் அர்ப்பணிக்கத் தகுந்த வீரர்கோட்டம் அமையவேண்டும். அவ்வப்போது அவர்களுக்கறிவிக்கத்தக்கதோர் திட்டம் வேண்டும். மறுத்தக்கூறும் பத் திரிகைகளுக்கு மறுப்பு எழுதவாதது ஒ ர் செய்தித்தாள் வேண்டும். எஃகு போன்ற உள்ளம் படைத்த இளைஞர்கள் வேண்டும் எந்த நேரத்திலும் ஊ ண் உ ற க் க மி ன் றி ப் பணியாற்ற பக்குவம் .த ஹி ங் த க ளே த ஸ் வேண்டும் தாக்குமரத்தில் தொங்கவும் தயங்காத தூய நெஞ்சினர் வேண்டும். பொதுநலத்தைச் சுயலத்துக்குப் பலியிடாத வழிகாட்டிகள் வேண்டும், உடன்படித்த மாணவர்கள் உலகறியாப் பேதை கள். கொட்டும் மையை ஒட்டியெடுக்கும் மை உறிஞ்சி அட்டைகள். சாட்டையைச் சுற்றித் தரையில் அடித்தவுடன் கரகரவெனச் சுற்றும் பம்பரம் போன்றவர்கள். பாடத்தைப் படித்து, படித்ததைப் படிதவருமல் ஒப்புவித்துப் பக்கத்து வகுப்புப் பலகையில் இடம் தேடும் இளைஞர்கள்.