பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

சாய்ந்த கோபுரம்


மழிந்து திரியும் சன்னியாசிகளின் சண்டாளத்தனத்துக்குத் தொண்டு செய்வது அந்த நிறம். ஊரார் பொருளை உபாதானத்தின் பேரால் வாங்கித் தன்னைப் பொன்காய்த்த மரமாக அலங்கரித்துக்கொண்டு, பழம் போன பாதையைப் பாலால் கழுவி, பாவத்துக்குத் தத்துவார்த்தம் கூறிப் பாமரரை எடமாற்றித் திரியும் ஈனர்கள் மெச்சிய நிறம் அது. ஆகவே அது வேண்டவே வேண்டாம். நாம் வாழப் பிறந்திருக்கின்றோம். அதுவும் சுதந்திரமாக. “பல்லெல்லாம் தெரியக் காட்டிப் பருவிரல் முகத்திற் கூட்டிச் சொல்லெல்லாம் சொல்லி நாட்டித், துணைக்கரம் விரித்து நீட்டி, மல்லெலாம் அகல ஓட்டி, மானமென்பதனை வீட்டி, இல்லெலாம் இரப்பதந்தே இழிவிழி வெந்த ஞான்றும்” என்ற முதுமொழியைக் கைவிட்டு, எண் ஜாண் ஜாணகித் தாவென்று கேட்கும் தரித்திரப் பிச்சைக்காரர்கள் அணியும் நிறம் அது. ஆகவே, அது வேண்டாம் என நிராகரித்து விட்டான். பிறகு மஞ்சள் நிறத்தை எண்ணினான். தள்ளாமையைத் தெரிவிக்கும் நிறம் மஞ்சள் நிறம். மங்களகரமானது என்று எண்ணாத நாடு அது. இலையுதிர்காலத்தில் எல்லா மரங்களின் இலைகளும் கொள்ளும் நிறம் அது. மேலும், மஞ்சள் நிறமடித்த மாளிகையில் வாழ்ந்த இளங்காதலர்கள் இரண்டு திங்களாவதற்குள் தங்கள் மணப் பிடியைத் தளர்த்திக் காதலுக்குக் கடைசீப் புள்ளியை வைத்து வீட்டார்கள் என ஆங்கில அறிஞன் ஸ்டாபோர்டு ஹெச்சென்ஸ். (Stafford Herness) என்பவன் எழுதியிருக்கின்றான். பூனைக்கண்களடைந்த நிறம் அது. தெளிவில்