பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

சாய்ந்த கோபுரம்



வழங்கப்படுமானால், நீதி மன்றம் என்போம். அறிவு போதிக்கப்படுமானால், அற மன்றம் என்போம். கல்வி போதிக்கப்படுமானால் கலாசாலை என்போம். பாராள்வோர் இருக்குமிடமானால் பாராளு மன்றம் என்போம். கற்சிலைகள் வைக்கப்பட்டிருந்தால் டவுள் எழுந்தருளிய கோயில் என்போம். எதையும் பயன்படுத்துபவன் குற்றமே தவிர பொருளின் குற்றமல்ல. ஆகவே எந்தப் பழியும் அந்தச் சிறைச் சாலையைச் சாராது. ஆனால், அந்தச் சிறைச்சாலையின் மூலம் சுய உரிமை தேவை என்று கெஞ்சிக் கேட்ட சமூகத்தின் குரல்வளயை நெரித்து நெஞ்சைப் பிளப்போம் என்று எக்காளமிட்ட ஏமாளிகள் குற்றம். அவர்கள் துணையை உண்மையென நம் உழைப்பாளிகளை உதாசீனம் செய்து தனது அகங்காரத்தால் பிரான்சு மக்களை வழுச்சண்டைக்கிழுத்த மன்னன் லூயியின் குற்றம் அரசாங்கத்தின் அபாய ஏற்பாட்டிற்கு, 'ஆம், ஆம்' என்று தூபம் போட்டுத் தூக்கிவிட்ட துடுக்கர்கள் குற்றம் மக்கள் கண்ணீரைக் கண்டு கலங்காது, அவர்கள் உடலின் செந்நீரைக் கண்டு கலங்காது உடலின் செந்நீரைப் பொங்கும் கடல் வெள்ளம் போல் கண்ட கயவர்களின் குற்றம். இருட் குகையாக இருந்த நாட்டை அருட்சோலையாககய சீர்திருத்தச் செம்மல்களைப் பெற்றெடுத்தது பிரான்சு. பாரிஸ் என்றால் அழகு, அழகு என்றால் பாரிஸ் எனுமளவுக்கு ஒன்றையொன்று பின்னிக்கொண்டிருக்கும். அழகு நகரைத் தன் அணியாக கொண்டது பிரான்சு. ஏழையின் உள்ளத்தைப் படம் பிடித்-