பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

41



துக் காட்டிய விக்டர்யூகோ, தருக்கரின் செருக்கைத் தவிடு பொடியாக்கிய ராகன் போன்ற கவிகளை, இரண்டாயிரம் பேரோடு போய் மன்னன் மாளிகையை முற்றுகையிட்ட ராஸ்வெல் போன்ற புரட்சி வீரர்களைப் பெற்றெடுத்தது பிரான்சு. உலகத்தையே வெறுக்குமளவுக்கு மனவலிமை கொண்ட ஞானிகளை, தத்துவப் பேராசிரியர்களை, மதபோதகர்களை, மாயாவாதம் பேசுபவர்களை, துடுப்பால் தள்ளப்பட்ட தோணி அசைவதைப் போல் தன் மெல்லிய கரங்களால் தடவி, அவர்களின் வைராக்கிய சித்தத்தைச் சிதற அடித்த உல்லாசிகள் நடமாடிய இடம் பிரான்சு.

உலக நடனச்சாலை, கன்னியரின் காமக் கோட்டம், வேந்தர்களின் உல்லாசபுரி, விருந்தினரின் மணிமாடம் வேற்றாரின் வேடிக்கை மண்டபம், ஆகிய இவ்வளவு ஆடம்பரங்களுக்கிடையே, மக்க ஸளைக் கொன்று குவிக்கும் மயானக்காடாய் இருந்தது. ஒரு பாஸ்டில்.

பாஸ்டில் என்றவுடனே ஓராயிரவர் ஈட்டியால் ஓயாது குத்த, தவறி ஓடினால் தாண்ட முடியாத பள்ளம். தட்டி விழுந்தாலும் தண்ணீர். நீந்துவோம் என்றால் சுற்றிலும் முதலைகள். கரையிலோ கரும்பாம்பு. அண்ணாந்து பார்த்தால் நெருப்பு மழை. உள்ளே மூழ்கினால் வெறும் சேறு. இதற்கிடையில் அகப்பட்ட மனிதன் உள்ளம். எப்படி இருக்குமோ, அதைக் காட்டிலும் நமது கற்-