பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

சாய்ந்த கோபுரம்



ஜோ : ஆமாம்...

நெப் : அதில் கண்டிருக்கின்ற ஜெர்மனியின் சகிக்கமுடியாத அவமானம் என்ற வாசகத்துக்கு நீர் கொள்ளும் கருத்தென்ன?

ஜோ: உங்கள் வீரத்தைப் பழிப்பதாய் நீங்கள் எண்ணுவது தவறு. எங்கள் நாட்டாரின் கோழைத்தனத்தைக் குத்திக்காட்டுகிறோம்.

நெப் : உங்கள் ஜெர்மன் நாட்டார் வீரர்களென்று நீங்கள் எண்ணுகிறீரா?

ஜோ : ஒரு தரத்தார் எப்போதும் வீரர்களாக வாழ முடியாது. ஆனால் எல்லோரும் எப்போதும் மனிதர்களாக வாழ முடியும்.

நெப் : அதற்கு நீர் வகுத்திருக்கும் திட்டமென்ன?

ஜோ : அது தனி மனிதன் திட்டத்தால் ஆகாது.

ஆனால், உலக மக்கள் அனைவருமே ஆயுதமெடுக்காப் பண்பு, இரத்தஞ் சிந்தா உணர்ச்சியை மேற்கொள்ள வேண்டும்.

நெப்: எனக்கு மறைமுகமாகப் புத்தி கற்பிக்கிறீரா!

ஜோ : மன்னிக்கவேண்டும் தாங்கள் அப்படி நினைக்க உரிமையுண்டு. ஆனால் அதே நேரத்தில் நான் நினைத்ததை சொல்லும் உரிமையும் எனக்குண்டு என்பதைத் தயவுசெய்து தாங்கள் மறந்துவிடக்கூடாது.