பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

53



முளையிலே கிள்ளி எறியுங்கள். செடியாய், மரமாய், பூத்துக் காய்த்துக் கனிய விடாதீர்கள். பகையைப் பகையால் வெல்லுங்கள்" இப்படிப் பேசுகின்றனர் மாளிகையிலிருந்த மந்தகாச வாழ்வினர். அவர்களுக்கு ஓர் இறுதிச்சடங்கு. ஈமக் கிரியை. மக்கள் மன்றத்தில் கடைசிவிசாரணை. இப்படி வெளியே கூடியிருந்த மக்களில் பேச்சு. "இத்தாலிய இளைஞர் இயக்கம்!" இத்தாலிய இளைஞர் இயக்கம்! என்ன இறுமாப்பு!, எனப் பெருமூச்சு விடுகின்றன அந்தப் பேராசை கொண்ட மூவல்லரசுகள். சுதந்திர ஆர்வத்தின் மேல் சதுரங்க விளையாட்டுக்காய் எப்படி நகருமோ யார் கண்டார்கள்? எப்படியும் நமக்கு இது ஒரு தலைவிதிதான். பகலில் பாண்டு வாத்தியங்கள், இரவில் பறவையின் கானங்கள். இது தவிர நாம் இதுவரை வேறொன்றையும் கேட்டறியோம். மெல்லியர் கரங்கள் நம்மைத் தீண்டியது தவிர வேறு யாரும் நம்மைத் தீண்டத்தகாதவர்கள். ஏதோ சிலபல நேரங்களில் மதுபானத்தின் அளவு அதிகமாய் விட்டபோது பஞ்சணையில் சாய்ந்தது தவிர, மற்ற எவனுக்கும் தலை சாய்த்திருக்க மாட்டோம். பலர் நம்காலடியில் விழுந்து பணிந்ததல்லாமல் நாம் யாருடைய காலிலும் விழுந்து பணிந்ததில்லை. கொண்டுவாருங்கள் அந்தக் கோடரிக்காம்பை. மரணக்குழி வெட்டுங்கள் அந்த மடையன் மாஜினிக்கு. எனத்தன் பழைய துருப்பிடித்த ஏகாதிபத்தியத் தொனியால் ஆணையிட்டார்கள் சால வெள்ளத்தைக் காணாத