பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

63


உடனே கைகால்களில் விலங்கிட்டுச் சிறையிலே தள்ளப்பட்டான் மாஜினி.


மரணதண்டனை நெ. 1.


மாஜினிக்கு மரணதண்டனை. இது தலையங்கம் பத்திரிகையில் கொட்டை எழுத்தில் கோனானை எதிர்த்தான், கோர்ட்டை அவமதித்தான் என்பது உள்ளே காணப்பட்ட செய்தி.


மறுநாள் காலை


ஏய் மாஜினி! வெளியேவா! காலைக்கடன்களை முடி. சிறையின் மணி அடித்துவிட்டது. பாரா மாற்றவேண்டும், வா, வா, வெளியேவா. நேரமாகிறது. வருகிறாயா, இல்லையா? வந்து உன்னே நெட்டி வெளியே தள்ளட்டுமா? இது என்ன உன் மாமியார்வீடா? கோபித்துக்கொண்டிருக்கிறாயே? வாவெளியே, உம், எழுந்திரு. எங்களுக்குத் தெரியாமல் மூலையில்போய் படுத்துக்கொண்டால் விட்டு விடுவோமா? உம், வரமாட்டாய்? சாகப்போகின்றோமே சாப்பாடு எதற்கு என்று எண்ணுகிறாயா? உன்மேல் இருக்கும் ஆசையல்லப்பா. இது அரசாங்கத்தின் ஆணை. வேளைக்குவேளை சாப்பாடு போட்டுத்தான் தீரவேண்டும், உம், வா வெளியே அடமட்டி. மூதேவி என்றெல்லாம் அர்ச்சனை, அப்போதும் மாஜினி வெளியேவரவில்லை. ஆத்திரத்தோடு உள்ளே நுழைகிறான் முறுக்கு மீசைக்காரன். மாஜினியின் மேல் சட்டையும் அதில் 16-ம் நெம்பர் என்ற அடையாளமுந்தான் இருக்