பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

சாய்ந்த கோபுரம்



தானா என பரிசோதிக்கப் பயன்படுத்தப்பட்ட கோபுரம் என்று தெரிந்து கொண்டிருந்தவர்கள் மிகச் சிலரே யாவர். பழைமையை விரும்பிப்படித்து அதிலேயே தம் அறிவைப் பறிகொடுத்த மக்கள், அதிசயத்தின் கோட்பாட்டைத் தெரிந்துகொள்ள அவ்வளவாகக் கவலை செலுத்தியதாகத் தெரியவில்லை. இந்த மாதிரியான மனோநிலை கொண்ட மக்கள் இந்தியாவில் மாத்திரமல்லாமல் உலகில் எங்கெல்லாம் மக்கள் வசித்தார்களோ, அங்கெல்லாம் இருக்கத்தான் செய்தார்கள்.

விஞ்ஞானம் தலைதூக்காத நேரத்தில் இவைகள் எல்லாம் அதிசயப் பொருள்களாகத் தென்பட்டதில் ஆச்சரியமில்லை. இன்றைய அதிசயங்கள் மேற்சொன்ன ஏழு அதிசயங்களை எல்லாம் வெட்கித் தலை குனியுமளவுக்குக் கேலி செய்கின்றன.

விஞ்ஞானம்

எவ்வளவோ தொலைவில் என்ன நடக்கிறது என்பதை இருந்த இடத்திலிருந்தே பார்த்துவிடும் டெலிவிஷன்; கடலுக்குள்ளேயே சென்று எதிரிக் கப்பலைத் தாக்கும் டார்பிடோ, ஆள் இல்லாமலே குறித்த இடத்திற்குக் குறித்த நேரத்தில் போய் குண்டுகளைப் போட்டுத் திரும்பும் V. 2. விமானங்கள்; அகில உலகச் செய்தியை அப்போதைக்கப்போது கேட்க, பையில் அடக்கம் செய்யும் அளவுக்கு ரேடியோ பெட்டி, பார்த்தாலே கண் கூசும் சூரியனைப் புகைப்படம் எடுக்க உள்ள சாதனங்கள்;