பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

3



எத்தனையாயிரம் மைல் தொலைவில், எந்தத் திசையில், எந்த நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்பதையறியச் சாதனம்; எதிரியின் கப்பலா, நம்முடைய கப்பலா என்று விரைவில் தெரிந்து கொள்ள ரேடர்; எப்போதோ பாடி, பாடியவர் இறந்துவிட்டாலும் இன்றுங் கேட்டுக் கொண்டிருப்பதற்கான கிராம போன் வசதிகள்; நீர் வீழ்ச்சியில் மின்சாரம்; நிலத்தில் மின்சாரம் ஆகிய கண்டுபிடிப்புகள்; மேகத்தை, ஆட்டையும் மாட்டையும் போல் ஓட்டி, வேண்டிய இடத்தில் வேண்டிய அளவுக்கு மழைபேய்ய வைத்துக் கொள்வது; ரசாயனப் பொருள்களால் சாயம் தோய்க்காமல் செடிக்கே ஊசியின் மூலம் சாயமருந்தேற்றிக் காய்க்கும் போதே பலவித நிறத்தோடு பஞ்சைப் பயிர் செய்வது; எழுபது ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்த கெடிகாரம் ஒன்று இன்னும் சாவிகொடுக்காமலே ஓடிக்கொண்டிருப்பது; இருதயத்தை மனிதன் உடலில் இருந்து தனியாக எடுத்து சிகிச்சை செய்த பிறகு மீண்டும் இருதயத்தைப் பதித்து விடுவது; போன்ற, எழுதவும் ஏடு இடந்தராத அளவுக்கு அதிசயங்கள் மலைபோல் குவிந்து விட்டன. அவற்றுள் ஒன்று நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அதிசய நிகழ்ச்சி.

கண்காட்சி

ஆஸ்திரேலியாவின் தலை நகரம் சிட்னி. பன்னிரண்டாயிரம் மைல்களுக்கப்பால் ஆங்கிலேய தலை-