பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

89



பக்கமெல்லாம் எதிர்ப்பை அனுபவித்தவன், இடையிலே ஒரு சிறிய சந்தோஷத்துக்காக மயங்கிவிடுவதில்லை.

ஒரு புலி துயத்திக்கொண்டு வர, கப்பித் கோடி ஒரு மரக்கிளையைக் காவிப்பிடிக்க, அந்த மரக்கிளையை அணில் கடித்துக் கத்தரித்துக்கொண்டிருக்க, அண்ணங்த பார்க்கும்போது ஒரு துளித்தேன் காவில் விழுக்கால் அது ஒரு இன்பமாகுமா ? அதுபோல், பொதுநலத்தொண்டன் கொள்கை வேகத்தில் ஒடிக்கொண்டிருக்க இடையிலே பல எதிரிகள் எதிர்க்க, அதிகாரிகள் அதட்ட வேட்டு சத்கமும், தடியடியும், கடையுத்தரவும் பிறக்க, இதற்கிடையிலே தன் கழுத்தில் விழும் மாலேக் காக ஒருவன் மகிழ்ந்துவிட முடியுமா? ஆகவே நாம் விடும் ஒவ்வோர் மூச்சும் கனல் கக்கவேண்டும் என்று கருதிக்கொண்டிருக்கும் நாம், கற்கண்டின் சுவையைப்பற்றிக் கவலைப்படுவானேன், என்ற கருக்கை யறியாதவர்களிடம் நாம் கடுஞ்சொற்களே வீசி, அவர்கள் கவலையை மேலும் மேலும் கிளறி, அவர்கள் நெஞ்சை நெஞ்சாக்குவதற்குப் பதில் கருணைகாட்டவேண்டும். க ண் ணியமாக கடந்து கொள்ளவேண்டும், கடமையை உணர்த்த வேண்டும். சொல் மாறிக் கி டையே கண்மாரி பொழியுமானல், அதற்காக மனம் மாறிப் போகக் கூடாது என்ற உண்மையைநீங்கள் அனைவரும் மனதில் வைத்துச் செயல்புரிவீர்களாக" என்று அடிக்கடி இத்தாலிய நாட்டை எழுப்பிய வண்ண