பக்கம்:சாவின் முத்தம்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

சாவின் முத்தம்


‘ஏன் என்னை வைகின் றீர்கள்’
என்கின்றாய். வேண்டு மானால்
‘கூன்வளர்க் கும்நி லாவைக் .
கேட்டுப்பார்! முகிலே! என்றும்,
நான்கசந் தாலும் எந்தன்
நறுந்தமிழ் அமுதங் தானே!’தூள்அடிக் கும்காற் றுன்னைத்
துரத்திடப் பறக்கின் றாய்.உன்
தோள்சுவை பார்க்கத் தானே
துடிக்கின்றேன். குனிந்து நீவா!
ஆள்தானே நான். எனக்கு,
ஆகாயம் தொடுவ தற்கு
நாள்படாப் புதிய கெஞ்சம்
மிகவுண்டு. கைதான் குட்டை!