பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

83


சின்னான், வண்டியோட வண்டியாய் நின்றான். சீனன் செருப்போடவே இருந்தான். கீரையம்மா ஒரு சுண்டு விரலைகூட நீட்டவில்லை.

போலீஸ்காரருக்கு பிரச்சினை தன்மானமாகியது.

"சொல்றது காதுலே விழலே. டேய், வண்டி கயிதே... வண்டியைத் தள்றியா, இல்லியா?"

சின்னான். இப்போது சவால் விட்டான்.

"அட சும்மா நிறுத்து சாரே... நீ யூனிபாரத்துக்கு தோதுவா நடந்துக்கினால், நாங்களும் அதுக்குத் தோதுவா நடந்துக்குவோம். நீ இன்னாடான்னா..."

போலீஸ்காரருக்கு ரத்தம் கொதித்தது. மிரட்டலோடு பேசினார்.

"இன்னாடா, திட்டம்போட்டு பண்றீங்களா? நாளைக்குப் பார்த்துக்கலாம். இந்த இடத்துலே உங்க கடை இருந்தா நான் தொப்பியை கழட்டி வச்சுறேன்!"

போலீஸ்காரர், எல்லா விவரங்களிலுமே அனுபவஸ்தர். புரிந்து கொண்டார். இது தனியாக கவனிக்கிற சமாச்சாரமில்லே... காந்தாவைப் பார்த்தபடியே சைக்கிளை உருட்டி, பிறகு அதில் ஏறிக் கொண்டு பெடல்களை அழுத்தினார்.

மறுநாள்.

பூக்கடைக்குப் போய்விட்டுத் திரும்பிய தாயம்மாவும், சின்னானும் ஆச்சரியப்பட்டார்கள். காந்தா பிள்ளையார் கோவில் முகப்பில், கடை போட்டிருந்தாள். தாயம்மா கண்ணைச் சிமிட்டியபடியே, "கோவில் பக்கம் கடை போடக் கூடாதுன்னு சொன்னாங்களே... இவ எப்படிப் போட்டா? ஒருவேளை, கோவில்காரன் எவனையாவது வளைச்சுப் பூட்டிருக்காளா...? எக்கேடும் கெடட்டும் தத்தேரி கயிதே..." என்றாள்.

ஒவ்வொருவரும் தத்தம் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினார்கள். தாயம்மா உதிரிப் பூக்களை பிளாஸ்டிக் பேப்பரில்