பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

நான்காவது குற்றச்சாட்டு


மாணிக்கத்தை எப்படி ஒழித்துக் கட்டலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த அந்த மேலதிகாரி, கலைக்குழுவின பாடகி, மேற்பார்வை என்ற சாக்கில் இந்த மாணிக்கம் தன்னிடம் முறைதவறி நடந்ததாக புகார் தெரிவிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அந்தக் கலைக்குழு அரசுப் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்றும் மிரட்டியிருக்கிறார். வேறுவழியில்லாமல் அந்தப் பாடகி கொடுத்த புகார் விசாரணைக்கு வந்தது. இந்தப் புகார் உள்நோக்கம் கொண்டது என்றும், மாணிக்கம் அப்படி நடந்து கொள்ளவில்லை என்றும் தள்ளுபடி செய்யப்பட்டது. எட்டாண்டுகளுக்கு முன்பு, குடும்ப நலத்துறை இயக்குநர் விசாரித்து, நிராகரித்த இந்தப் புகாரை இப்போது பிணத்தைத் தோண்டி எடுத்து ஒப்பாளி போடுவதுபோல் போடுகிறார்கள்'.

'நீங்க... இப்படிச் சொல்றீங்களா..? இல்ல விசாரணை அறிக்கையா?

'விசாரணை அறிக்கைதான் சார்'.

'சரி. இந்த பரிந்துரையையும் அரசு ஏற்றுக் கொள்கிறது'.

'சார்... நிசமாவே ஒரு இருண்டுபோன விட்டுக்கு நீங்க விளக்கேற்றி வைக்கிங்க சார்'

'விளக்கேற்றினால் மட்டும் போதாது... எண்ணெய்யும் ஊற்றணும். அடுத்தக் குற்றச்சாட்டு...?

'அது குற்றச்சாட்டே இல்ல சார்'.

'நீங்களே சொன்னால் எப்படி? கோப்பைப் படிங்க'.

'நான்காவது குற்றச் சாட்டு என்னவெனில், சம்பந் தப்பட்ட மாணிக்கம். மேலே குறிப்பிட்ட மூன்று குற்றங்களைப் புரிந்து, அரசு ஊழியர் நன்னடத்தை விதிகளை மீறி, ஒழுக்கக்கேடு புரிந்திருக்கிறார்'.

'இந்தக் குற்றச்சாட்டுக்கு விசாரணை அறிக்கை என்ன சொல்லுது'

'இது குற்றச்சாட்டே இல்லை சார். ஆதனால அறிக்கையில் இதுபற்றி குறிப்பிடல'.