பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/148

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

நான்காவது குற்றச்சாட்டு


துணைச்செயலாளரிடம், செயலாளர் எப்படி பேசவேண்டும் என்று நினைத்தாரோ, அந்த நினைப்பைப் பேச்சாக்கினார்.

'நீங்க வரம்பு மீறி பேசுறிங்க மிஸ் பர்வின்... ஒரு மூத்த அதிகாரிகிட்ட பேசும்போது பேச்சுல கண்ணியம் வேண்டும். குரல உயர்த்தக் கூடாது... கையை ஆட்டக் கூடாது.... நீங்க பேசுன முறையும், அரசு ஊழியர் நன்னடத்தை விதியை மீறிய செயல் தான். முதல்தடவை என்கிறதால வாய்மொழியாய் எச்சரிக்கிறேன்'.

'மன்னிக்கணும் சார் கொச்சையான உதாரணத்தைச் சொன்னது தப்புத்தான் சார். ஆனாலும் நான்காவது குற்றச்சாட்டு என்பது...'

'இதுக்கு மேலே பேசாதீங்க பிளீஸ்.'

'பேசல சார்..... ஆனாலும் நான் நான்காவது குற்றச்சாட்டைப்பற்றி, சட்டத்துறையோட கருத்தைக் கேட்கலாம் சார்.'

'நான்காாவது குற்றச் சாட்டு நான்காவது குற்றச் சாட்டுத்தான். கோப்பை வைத்துட்டுப் போங்க. கோப்புல என்ன உத்திரவு போடுறனோ, அதைமட்டும் செயல்படுத்துங்க. நீங்க போகலாம். என் நேரத்தை இதுக்கு மேல வீணாக்காதீங்க.'

அரசுச் செயலாளர், இருக்கையை விட்டு எழுந்து பர்வினையும் எழவைத்தார்.

பர்வின், தனக்குள்ளே முனங்கிக்கொண்டு ஒவ்வொரு முனங்கலுக்கும் கண்கள் ஒவ்வொரு விதமாய் சுழல. அந்த அறைக்கு வெளியே வந்தது தெரியாமலேயே வந்துவிட்டாள். அரைநாள் விடுமுறை போட்டுவிட்டு, மாணிக்கம் இருக்கும் பார்வையாளர் அறைப் பக்கம் தலைகாட்டாமல், வீட்டுக்கு, எப்படித் தலை மறைவாய்ப் போவதென்று யோசித்துக் கொண்டிருக்கிறாள்.


மின்னம்பலம் - ஜூன், 1999