பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/191

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சு. சமுத்திரம்
167
 

“பார்வதி அதிகாரி பயலுககிட்ட சொன்னவள்தான்... அவளை அப்படி சொல்ல வச்சது நாங்கதான். இந்த மலைக்கு நாங்க கூலி ஆட்கள் இல்ல. சொந்தக்காரிங்க... சங்கத்துக்கு சந்தா கட்டுற மெம்பருங்க... இப்பவே ரெண்டுல ஒண்னு தெரிஞ்சாகனும்”

ஆங்காங்கே சிதறி நின்ற கூட்டம், ஒருவரோடு ஒருவர் நெருங்கி கும்பலாகிறது. அத்தனைக் கண்களிலும் சின்னச்சின்ன பொறிகள்... அவை ஒட்டுமொத்தமாய் மனிதத்தீயாகி, அந்த மலைக்காடு முழுவதும் வியாபிக்கிறது. கரிக்கட்டையாய் போன பார்வதியும், மீண்டும் ஒரு சிறு பொறியாகி, அந்த மனிதத்தீயில் சங்கமிக்கிறாள்.

அவள் விகடன் - நவம்பர், 1999