பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

பாம்புக் கயிறு


தண்டாயுதபாணி, அதிகாரி அர்ச்சுனனை முறைத்த படியே, அடிமேல் அடி வைத்து முன்னேறினான். அவர் முன்னால், கண்ணில் விரலைவிட்டு ஆட்டக்கூடிய தூரத்தில் நின்று கொண்டு, கர்ஜித்தான்.

"ஸார்... மொதல்ல ஒரு விஷயத்தை நிர்வாகத்துல தெரிஞ்சுக்கணும். முதல்ல, ராம் அண்ட் சீதா என்கிறது. அப்புறம் கோவிந்தா அண்ட் கோ என்கிறது. அப்புறம் பழையபடியும் ராம் அண்ட் சீதாதான் டெலிவரி செய்யனும் என்கிறது. இதுல்லாம் துக்ளக் மாதிரி..."

மேற்கொண்டு ஆணித்தரமாகப் பேசப்போன தண்டாயுதபாணியை, அதிகாரி அர்ச்சுனன், அப்பாவித்தனமாய்ப் பார்த்தபடி, இடைமறித்துப் பேசினார்.

"யோவ்... சீதாதான், டெலிவரி செய்யனுமுன்னு நீ சொன்னதும், பல நாளாய் ஒன்கிட்டே சொல்ல நினைத்தது. இப்போ ஞாபகத்துக்கு வருதுய்யா... ஒன் ஒய்ப் டெலிவரிக்குப் போனதால, நீ சாப்பாடு கிடைக்காமல் தெருவுல நிற்கல்ல? நாளைக்கு மட்டும் அப்படி நிற்க வேண்டாம். என் வீட்ல ஒனக்கு டின்னர், ஒன் மூஞ்சிக்காகப் போடல, ஒன் வீட்டு கிரகப்பிரவேசத்துல, ஒன் ஒய்ப் சீதா என் தட்டுல என்னவெல்லாமோ கொட்டியபடியே 'அங்கிள்... அங்கிள்’னு என் சொந்த டாட்டர் மாதிரி அன்பைக் காட்டினாள்பாரு, தின்னதை சத்தியமாய் மறந்துட்டேன். ஆனால் அவளோட அன்பை மறக்கலய்யா. மட்டனா, சிக்கனா, எது ஒனக்குப் பிடிக்கும்? ஏய்யா... ரெண்டும் வேணும் என்கிற மாதிரி பார்க்கிறே? நான் கிளாஸ் ஒன் ஆபீசர்தான். ஆனாலும் என்னால ஒண்ணுதான் தர முடியும். சொல்லுய்யா. சொல்லி தொலய்யா..."

ஆயுதபாணியாய் வந்த தண்டாயுதபாணி நிராயுதபாணியாகி கண்ணிர் மல்கக் குரல் கம்மக் கேட்டான்.

“ஸார் எனக்கு சாப்பாடு போடுறிங்களோ, இல்லையோ இருநூறு ரூபாய் கடனாய் தாங்க ஸார். அடுத்த மாதம் தந்துடறேன். ஸார்!”


சாவி : 1-9-1985