பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

43


போறான். அதை எப்படி தாங்கிக்க முடியும்.... பாவம் புள்ளக்குட்டிக்காரன்....'

வேதமுத்து, எழுதிக் கொண்டிருக்கும் கடற்கரைப் பாண்டிக்கும், சொல்லிக் கொண்டிருக்கும் பாத்திமாவுக்கும் இடையே போகப் போனான். பிறகு, முன் வைத்த காலை பின் வைத்தான். அங்கே எழுதப்படுவதை கேட்கவோ அல்லது படிக்கவோ மனங்கேட்காமல் வெளியே வந்தான். உப்புத் தின்றவன் தண்ணீரைக் குடித்துத்தான் ஆகவேண்டும் என்ற பழமொழியை நினைத்துப் பார்த்தான். ஆனாலும் மனம், கடல் உப்பாய் அரித்தது. அலுவலகத்தில் இந்த பாத்திமா உட்பட எல்லா ஊழியர்களும் இந்த வேதமுத்துவை 'வா போ' என்று பேசும்போது, அதிகாரி பால்வண்ணன்தான் 'நீங்க' என்று அழைப்பான். ஆசாமி ஷோக் பேர்வழிதான். ஆபீஸிலேயே 'குவார்ட்டர்' போடுகிற வன்தான். ஒருதடவை இவனைக்கூட வாங்கிவரச் சொன்னவன்தான். ஆனால், இவன் முறைத்த முறைப்பில், அவன், அன்று போடவில்லை. இவனையும் அதற்கு பிறகு அப்படிக் கேட்டதில்லை. மரியாதை கொடுப்பதில் பின்வாங்கவும் இல்லை. அதோடு, அதிகாரியின் மனைவி அசல் லட்சுமி. லட்சுமி பக்தர்களை எப்படி நடத்துவாளோ ஆனால், இந்த மானுட லட்சுமி, ஓரிரு தடவை, இந்த பியூன் வேதமுத்துவை டைனிங் டேபிளில், தன் குழந்தைகளோடு சரி நிகர் சமானமாய் வைத்து சாப்பாடு போட்டவள். இவன், தட்டைக் கழுவ எழுந்தபோது அதை தடுத்தாட் கொண்டவள். அப்படிப்பட்ட அந்த உத்தமியை கணவன் செய்த காரியத்திற்காக வேதனைபட வைப்பதா... கூனிக் குறுகி வீட்டுக்குள்ளேயே முடங்க வைப்பதா... ஒருவேளை அந்த அம்மாவிடமே விஷயத்தை சொல்லலாமா... வேண்டாம். ஒரு பெண்ணுக்கு நிம்மதியே-அவள் புருஷனைப் பற்றி தெரியாத வரைக்கும் தான்.

வேதமுத்து. ஒரு முடிவோடு அலுவலகத்திற்கு வெளியே வந்தான். பால்வண்ணனிடம் விஷயத்தை சொல்லிவிட்டால் போதும் சமாளித்து விடுவான். அசல் இந்திரஜித்.

வேதமுத்து, வேகவேகமாய் நடந்து, கண்ணாடிக் குடில் மாதிரி இருந்த ஒரு எஸ்.டி.டி. பூத்துக்கு போனான். நல்ல வேளையாக பக்ரீத்