பக்கம்:சிட்டுக் குருவி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




பச்சைக் குழந்தை என்றனுக்குப்
பக்குவமாகப் பெயர் வைக்க,
இச்சை கொண்டனர், பெரியோர்கள்.
என்னைச் சுற்றிக் கூடினர்கள்.

அம்மா உடனே, அவளுடைய
அப்பா பெயரைக் குறிப்பிட்டு,
சம்பந் தம்என அழைப்பதுவே
சரிப்படும் என்று கூறிட்டாள்.

30