பக்கம்:சிட்டுக் குருவி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எத்தனையோ மீன் வகைகள்
கேள், தம்பி, கேள்-இங்கே
எண்ண யாரால் முடியுமென்றே
கேள், தம்பி, கேள்.


மழையே பெய்யா திருந்திடினும்,
கேள், தம்பி, கேள்-கடல்
வரண்டு போவ தில்லையடா
கேள், தம்பி, கேள்.


அலைகள் போடும் சப்தமடா
கேள், தம்பி, கேள்-அதை
அடக்க யாரால் முடியுமென்றே
கேள், தம்பி, கேள்.

37